பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை யாருன்னு கேட்டா அது எடப்பாடி பழனிசாமி தான் என்று திமுக இளைஞரணி பொதுச்செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார. பத்து தோல்வி பழனிச்சாமி என்று இல்லாமல் மொத்த தொகுதியிலும் பழனிச்சாமியை ஓட விடனும் என்று நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில், திருப்பத்தூர் சட்டமன்ற வேட்பாளர் நல்லதம்பி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் கவிதா தண்டபாணி ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஒன்றான மகளிர் உரிமை தொகை 1000 வழங்கப்பட்டு வருகிறது.. தேர்தலில் வெற்றி பெற்றால் 2000 ரூபாயாக வழங்கப்படும் என கூறினார்.

மேலும் ஒன்று முதல் ஐந்தாவது வகுப்பு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தினை செயல்படுத்தி உள்ளோம்.. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எட்டாவது வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படும்.. மேலும் 8000 கொண்ட கூப்பன் வழங்கப்படும்.. அதில் உங்களுக்கு தேவையான டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாம் என கூறினார்.
மேலும் அதிமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். திராவிட மாடியில் கல்லூரியில் பயிலும் 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது என்று லேப்டாப் தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்த தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளராக களம் இறங்கும் திருப்பத்தூர் சட்டமன்ற வேட்பாளர் நல்லதம்பி யையும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கவிதா தண்டபாணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என உங்களை முதல்வர்களுடைய மகனாகவும் முன்னாள் முதல்வர் பேரனாகவும் கேட்டுக்கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக பிரச்சாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே 3 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இரண்டாம் நாளான நேற்று (மார்ச் 31) ஒரே நாளில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்திருந்தார். திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலு, அரூர் சட்டமன்றத் தொகுதியி வேட்பாளர் அ.சண்முகம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பழனியப்பன், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் , தளி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் , வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சீனிவாசன், ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா ஆகியோருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார்.
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications