தலைவர் 173! ரஜினியின் படத்தை இயக்க போவது இந்த இயக்குநரா? வெளியான உறுதி தகவல்?
சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் 173 ஆவது படத்தை இயக்குவது இந்த இயக்குநரா? இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டதை தொடர்ந்து ரஜினிக்கு இவரது கதை பிடித்து போய்விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் யார் என்பதை பார்ப்போம்.
கூலி படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் கமல் தயாரிப்பில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு, கமலின் பிறந்தநாளையொட்டி நவம்பர் 6ஆம் தேதி வெளியானது. அந்த படத்தை சுந்தர் சி இயக்குகிறார் என சொல்லப்பட்டது.
ரஜினி ரசிகர்களுக்கு, கமல் தயாரிப்பில் அவர் நடிப்பது அதிருப்தியை அளித்தாலும் அவரது படம் வெளியாகிறதே என மகிழ்ச்சி அடைந்தனர். இதை கமல் ரசிகர்களும் விரும்பவில்லை.
அறிவித்த சில நாட்களிலேயே அந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தலைவர் 173 படம் தொடருமா இல்லை நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் ரஜினி இளம் இயக்குநர்களான டான் படத்தின் சிபி சக்கரவர்த்தி, பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோருடன் ரஜினி கதை கேட்டதாக தகவல்கள் வெளியாகின.
ரஜினியுடன் பா. ரஞ்சித், நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இளம் இயக்குநர்களுடன் சில ஆண்டுகளாக பணியாற்றிய நிலையில் தனது 173ஆவது படத்தையும் புதிய இயக்குநரிடம் அவர் ஒப்படைப்பார் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கு 173ஆவது படத்தின் இயக்குநர் யார் என்பதை நாளை (ஜனவரி 3) காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது. இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம் ட்வீட் வெளியிட்டுள்ளது.
இதனால் ரஜினி படத்தை இயக்க போகும் புதிய இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளரான பிஸ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, ரஜினியின் 173 ஆவது படத்தை இயக்குகிறார், இதற்கான அறிவிப்பு நாளை காலை வெளியாகிறது" என தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications