பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் போர் சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்த போரை தொடங்கி வைத்த அமெரிக்கா கடுமையாக பாதிப்படைந்திருக்கிறது. அந்நாட்டின் பங்கு சந்தை சுமார் 1 டிரில்லியன் டாலர் இழப்பை சந்தித்திருக்கிறது.

1 டிரில்லியன் டாலர் எனில், இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.84 லட்சம் கோடிக்கு சமம். இந்த இழப்பு அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

US trump iran

போரை தொடங்கிய அமெரிக்கா

பிப்.28ம் தேதி ஈரான் போரை அமெரிக்கா தொடங்கியது. இதன் காரணமாக, மார்ச் மாதம் தொடக்கம் முதல் அமெரிக்க பங்கு சந்தை படுத்த படுக்கையாக மாறிவிட்டது. இப்போதைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், சற்று ஆறுதலான செய்தியை சொல்லியிருக்கிறார். ஏப்.6 வரை ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை என்பதுதான் அந்த குட் நியூஸ். ஆனால், அதன் பிறகு தாக்குதல் நடத்தினால் என்ன செய்வது? எனவேதான் முதலீட்டாளர்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை, ராக்கெட் வேகத்தில் அதிகரித்திருக்கிறது. இதனால் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் சேர்த்து, எக்ஸான் மொபில் போன்ற பெரிய நிறுவனங்களின் பங்குகளை அப்படியே பாதாளத்தை நோக்கி திருப்பியிருக்கிறது. இப்படியே போனால், பொருளாதார மந்தநிலை வந்துவிடுமோ என்று பயந்த நிறுவனங்கள், பங்குகளை அவசர அவசரமாக விற்று வருகின்றன. இது பங்கு சங்தை சரிய முக்கிய காரணமாகும்.

பங்கு சந்தை சரிவு

இந்த சரிவு இந்திய பங்கு சந்தையையும் பாதிக்கும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அவசர, அவசரமாக தங்கள் முதலீடுகளை இந்திய பங்கு சந்தையிலிருந்து எடுக்க தொடங்கலாம். அதே நேரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த பங்குகள் அழுத்தத்தை சந்திக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்திய பங்கு சந்தை

பங்கு சந்தை சரிவு என்பது, எங்கோ வெளிநாட்டில் நடப்பதை போன்று நாம் புரிந்துக்கொள்ள கூடாது. இது சாமானிய மக்களையும் பாதிக்கும். எரிபொருள் விலை உயரும். இதன் காரணமாக டிரான்ஸ்போர்ட் கட்டணம் அதிகரிக்கும். கடைசியில் விலைவாசி உயர்வாக இது சாமானிய மக்களின் தலையில்தான் வந்து விடியும். அதேபோல பிளாஸ்டிக் பொருட்கள், கச்சா எண்ணெய்யில் இருந்து கிடைக்கும் பாலிமர் என்கிற பொருளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களின் விலையும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+