அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் டோக்கன், வெல்லம் குழப்பம்? ரேஷனில் ஆளும் கட்சி மீது புகார்?
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.. 2 கரும்புடன் வெல்லம் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.. பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ள பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சில ரேஷன் கடைகளில் ஆளும் கட்சியினர் மீது புகார்கள் எழுந்துள்ளன.. அது என்ன?
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் 08.01.2026 முதல் 12.01.2026 வரை மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெறுகிறது.

இந்த விநியோகத்துக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளன. டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் சென்று பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள்
பயோமெட்ரிக் முறையில் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பிறகே பரிசு வழங்கப்படும் என்றும், பெற்ற விவரம் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் மூலம் அனுப்பப்படும், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே நேரில் வந்து பொருட்களை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இணைய வழி பிரதிநிதிகள் அல்லது மாற்று நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதனைதவிர சில அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது.. அதில், ரேஷன் கடைகளில் தினமும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தனி ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
வெல்லம், கரும்பு
எங்கு விதிமுறைகள் மீறப்பட்டாலும் உடனடியாக புகார் அளிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எந்த குழப்பமும் இல்லாமல், அனைவருக்கும் சமமாக பரிசு சென்றடைய வேண்டும்..
பணம், அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை முழுமையாக கிடைக்கிறதா என்பதை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். குறைபாடு கண்டறியப்பட்டால் உடனடி திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே, பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள உதவி எண்களையும் அரசு வெளியிட்டுள்ளது...
டோக்கன்கள் புகார்
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்காக மாவட்ட கட்டுப்பாட்டு அறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர்கள் என பகுதி வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு மேற்கண்ட சீரிய நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் திமுக மற்றும் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
சில பகுதிகளில் ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மட்டுமே பரிசு வழங்கப்படுவதாகவும், இது அரசின் நேரடி திட்டமாக இல்லாமல் அரசியல் நிகழ்வாக மாற்றப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் மீது தேவையற்ற அழுத்தம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வலுவாக எழுந்துள்ளது..
தமிழக அரசு அறிவுறுத்தல்
அதாவது சில ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்களாக உள்ள கட்சி நிர்வாகிகள் வந்து, தங்களது முன்னிலையில்தான் கார்டுதாரர்களிடம் பொங்குல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்களாம்.
மேலும் சில ரேஷன் கடைகளின் வாசலில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான விவரங்களுடன் கட்சி பேனர்களையும் வைத்து விட்டு போகிறார்களாம்..
ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை தமிழக அரசு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது... முறைகேடுகளை தவிர்க்க அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விதிமுறைகள் மீறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
வெல்லம், கரும்பு
இதனிடையே, ரேஷனில் வெல்லம் வழங்கப்பட வேண்டும், கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது..
கரும்பு கொள்முதல் தாமதமானால், ஏக்கருக்கு 1.50 லட்சம் நஷ்டம் ஏற்படும் என்பதால், தமிழக அரசு உடனடியாக கரும்பை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications