Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை".. புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் - நயினார் நாகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

கோவை: அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை, நாங்களும் அண்ணாவை போற்றி புகழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் வழிபாடு நடத்தினர். பின்னர், கோவில் வாசலில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

nainar-nagendran-has-said-that-no-one-is-afraid-of-anna-and-we-too-admire-and-praise-him

அப்போது அவர் கூறியதாவது: இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்னர் முகலாய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. அப்பொழுது பல்வேறு கொடுமைகள் அனுபவிக்கப்பட்டது. மத மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை படையெடுப்பு நடந்தது. சோமநாதபுரம் ஆலயத்தில் கஜினி முகமது 17 முறை படை எடுத்தார்.

செல்வங்களை எல்லாம் எடுத்துச் சென்றார். ஆலயங்களும் சேதப்படுத்தப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கோவில் புனரமைக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகிறது. இந்த 75வது ஆண்டு விழாவில் தமிழகம் முழுவதும் 150 சிவாலயங்களில் சாந்தி பூஜை நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் எல்லா சிவாலயங்களிலும் சாந்தி பூஜை நடைபெறுகிறது.

நாளை மோடி தலைமையில் இதை திருவிழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. இதன் அடிப்படையில் சிவாலயத்தில் இன்று நாங்கள் வழிபாடு செய்திருக்கிறோம். இந்த வழிபாட்டின் பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என வழிபாடு செய்திருக்கிறோம்.

கூட்டணி ஆட்சியா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேசிய ஜனநாயக ஆட்சி, கூட்டணிக் கட்சியின் ஆட்சி என்று பதிலளித்தார். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. அமைச்சர்கள் யார் என்பது தேர்தல் முடிந்து முடிவு செய்யலாம். யாரெல்லாம் வெற்றி பெறுவார்களோ அப்பொழுது பார்க்கலாம்.

பாஜகவில் இருந்து வெற்றி பெற்றால் அமைச்சர்கள் ஆவார்களா? என்ற கேள்விக்கு அது அப்புறம் பார்க்கலாம். அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்ற எந்த அழுத்தமும் இதுவரை கொடுக்கவில்லை. எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்தவுடன் சொல்கின்றோம். இரட்டை எண்ணிக்கையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு செல்வார்கள். தேமுதிக இப்பொழுது முடிவை சொல்லவில்லை. அவர்கள் முடிவு சொன்னவுடன் பார்க்கலாம்.

தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி தொடர்பாக பேசவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இப்பொழுது ஒவ்வொருவராக கூட்டணிக்கு வர ஆரம்பித்து வந்திருக்கின்றனர். முதல் கட்டமாக அன்புமணி ராமதாஸ் வந்திருக்கிறார். பொங்கல் முடியட்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.

பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் வந்திருப்பது, பா.ம.க.வில் இருந்து ஐம்பது சதவீதம் மட்டும் தானே என்ற கேள்விக்கு, அப்படி எப்படி பார்க்க முடியும். அன்புமணி ராமதாஸ் வந்திருக்கிறார். அது 50 சதவீதம் மட்டும் தான் என சொல்ல முடியாது. தமிழக முதல்வர் ஐடி, இடி வரிசையில் சென்சார் போர்டையும் பயன்படுத்துகிறது என முதல்வர் சொல்லியிருப்பது குறித்த கேள்விக்கு, பராசக்தி படம் ரிலீஸ் ஆனது முதல்வருக்கு தெரியாதா?.

இந்த படத்தை எப்படி சென்சார் போர்டு ரிலீஸ் செய்தது?. பராசக்தி யாருடைய படம்?. இந்தப் படம் எப்படி ரிலீஸ் ஆனது என கேள்வி எழுப்பினார். சென்சார் போர்டு அவர்கள் விதிப்படி செயல்படுகின்றனர். அண்ணாவின் வசனங்கள் படத்தில் கட் செய்யப்பட்டிருக்கிறது. அண்ணாவை பார்த்து பயமா என்ற கேள்விக்கு, அண்ணாவை பார்த்து யாரும் பயப்பட வில்லை. அண்ணாவை போற்றி புகழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

கொங்கு மண்டலத்தை பா.ஜ.க. டார்கெட் செய்கின்றதா என்ற கேள்விக்கு, கொங்கு மண்டலத்தை மட்டும் நாங்கள் டார்கெட் செய்யவில்லை. தமிழகம் முழுவதும் டார்கெட் செய்கிறோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+