Delhi Car Blast:டெல்லி செங்கோட்டை அருகே காரில் குண்டுவெடிப்பு.. 13 பேர் பலி! பெரும் பதற்றம்
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். காரில் குண்டு வெடித்ததா என விசாரணை நடந்து வருகிறது. காரில் வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 3-4 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
டெல்லி தீயணைப்புத் துறையினருக்கு இன்று மாலை 6:55 மணியளவில் வெடிப்பு குறித்து அழைப்பு வந்துள்ளது. அதன் பிறகு ஏழு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 CAT ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. உடனடியாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. மேலும் பலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 13 ஆக அதிகரித்துள்ளது.
கார் வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications