எல்லை தாக்குதலுக்கு செம பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்- 15 பாக். வீரர்கள் பலி!!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு ராணுவம் தக்க பதிலடியைக் கொடுத்துள்ளது. இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 2 இந்திய வீரர்கள், எல்லை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கண்மூடித்தனமான தாக்குதலால் எல்லையோர கிராம மக்கள் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று பதிலடி கொடுத்தனர்.
இந்த பதிலடியில் பாகிஸ்தானின் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி அருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் முதலில் தாக்குதல் நடத்தியதால் நாம் திருப்பி பதிலடி கொடுக்க நேரிட்டது; பாகிஸ்தானைப் போல பொதுமக்களை இலக்கு வைத்து நாம் தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications