தாவூத்தை நெருங்கும் போலீஸ்? மும்பையில் "கூட்டாளி" ரியாஸ் பாத்தி சுற்றி வளைத்து கைது!
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ரியாஸ் பாத்தி 2 போலி பாஸ்போர்ட்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ரியாஸ் பாத்தி. இவர் மீது நில அபகரிப்பு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மும்பையில் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் ரியாஸ் பாத்தி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வர உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமானநிலையத்துக்கு விரைந்து சென்ற புலனாய்வு அதிகாரிகள், ஜோகனஸ்பர்க் செல்வதற்காக விமான நிலையம் வந்த ரியாஸ் பாத்தியை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு பாஸ்போர்ட்டில் மீசை இல்லாமலும், இன்னொரு பாஸ்போர்ட்டில் மீசையுடனும் அவரது புகைப்படம் இருந்தது. ஒன்றில் அவரது சரியான பெயரும், மற்றொன்றில் பூல்ஜி பாத்தி என்றும் இருந்தன.
இந்த பாஸ்போர்ட்டுகளை கடந்த 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் அவர் ஜெய்ப்பூரில் இருந்து பெற்றது தெரியவந்தது. இரண்டு பாஸ்போர்ட்டிலும் வெவ்வேறு பிறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அவை போலி பாஸ்போர்ட்டுகள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரியாஸ் பாத்தியை, வரும் 2-ந் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications