பஞ்சாபில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் குர்தாஸ்பூர் எஸ்.பி. பல்ஜீத் சிங் பலி
குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் உடையில் வந்த தீவிரவாதிகள் காவல் நிலையம் மற்றும் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதில் 6 பொதுமக்கள் மற்றும் 2 போலீசார் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவத்தினரின் தாக்குதலில் குர்தாஸ்பூர் எஸ்.பி. பல்ஜீத் சிங் பலியாகியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினாநகர் காவல் நிலையம் மற்றும் பேருந்து ஒன்றின் மீது ராணுவ உடையில் இருந்த 4 தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பொதுமக்கள் மற்றும் 2 போலீசார் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தீவிரவாதிகள் யாரையும் பிணையக்கைதிகளாக பிடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. காவல் நிலையத்தில் 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் 15 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
காலை 5.30 மணிக்கு நடந்த இந்த தாக்குதலால் குர்தாஸ்பூரில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையினரை உடனே தினாநகர் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாருக்கு உதவுமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். தீவிரவாதிகள் காவல் நிலையம் அருகே உள்ள காலி கட்டிடத்தில் பதுங்கியுள்ளனர்.
இந்த தாக்குதலை அடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே நடந்துள்ளது. இதற்கிடையே பதன்கோட்-அமிர்தசரஸ் ரயில் பாதையில் 5 குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
ராஜ்நாத் சிங் உத்தரவை அடுத்து ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ளனர். பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க ராணுவத்தினர் முயன்று வருகிறார்கள். இந்நிலையில் தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு வீரர் காயம் அடைந்தார்.
இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவர் பலியாகியுள்ளார். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்நிலையில் தீவிரவாதிகள் சுட்டதில் குர்தாஸ்பூர் எஸ்.பி. பல்ஜீத் சிங் பலியாகியுள்ளார்.
இதற்கிடையே ராஜ்நாத் சிங் பஞ்சாப் முதல்வருடன் தொலைபேசியில் பேசி நிலைமை குறித்து விவரம் பெற்றுள்ளார். மேலும் பஞ்சாபில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் குர்தாஸ்பூரில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications