இந்துக்களை கொல்லவே வந்தேன்...பிடிபட்ட பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாதி அதிர்ச்சி வாக்குமூலம்
உதம்பூர் : இந்துக்களை கொல்லவே இந்தியாவுக்குள் ஊடுருவினேன் என்று காஷ்மீரில் பிடிபட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி உஸ்மான் காசிம்கான் தெரிவித்துள்ளான்.
எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில் மோயின் கான் என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அத்துடன் பிணைக் கைதிகளை பிடித்து வைத்த நிலையில் உஸ்மான், காசிம் கான் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் முகமது நவேத் என்ற தீவிரவாதியும் பரிதாபமாக சிக்கினான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானின் ஃபைசாலாபாத்தில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்பு சக தீவிரவாதி மோயின் கானுடன் வந்ததாகவும், இந்துக்களை கொல்வதற்காகவே இருவரும் வந்ததாகவும் தெரிவித்துள்ளான்.
முதலில் தனக்கு 20 வயது என்றும், பின்னர், 16வயது என்றும் மாற்றி மாற்றி விசாரணையில் தெரிவித்துள்ளான்.
இந்தியாவில் சிறுவர்களுக்கான தண்டனை மற்றும் சட்ட நடைமுறைகளை அறிந்துள்ள லஷ்கர் தீவிரவாதிகள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களைத் தேர்தெடுத்து பயிற்சியளித்து தாக்குதலுக்காக இந்தியாவுக்குள் அனுப்பி வருகின்றனர்.
மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபிற்குப் பிறகு உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி இவன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications