அந்தமானில் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
டெல்லி: அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் முடிய தென்மேற்கு பருவமழை காலமாகும். ஆண்டு தோறும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மே மாதம் 17ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அது 3 நாட்களுக்கு முன்னதாக இன்றே தொடங்கியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு பருவமழை முன்னேறியது. இன்று முதல் 2 நாளுக்கு அந்தமான், நிகோபாரில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நிகோபார் தீவுக் கடலுக்கு மீனவர்கள் இன்றும், நாளையும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது. அந்தமான் தீவு கடலுக்கு மே 15 முதல் 17 வரை மீன் பிடிக்க செல்லக் வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தமானில் மழை பெய்ய துவங்கி 2 வாரங்களுக்குள் கேரளா பருவ மழையை சந்திக்கும். எனவே இந்த மாதம் 28 அல்லது 29 தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழியத் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications