For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடகிழக்கு மாநில வெள்ளத்தை கண்டுகொள்ளாத தேசிய ஊடகங்கள்... மணிப்பூர் முதல்வர் பாய்ச்சல்

வடகிழக்கு மாநில வெள்ளத்தை தேசிய கண்டுகொள்ளாமல் இருப்பதாக மணிப்பூர் முதல்வர் பைரென் சிங் சாடியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

இம்பால்: வெள்ளத்தில் வடகிழக்கு மாநிலங்கள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன... ஆனால் தேசிய ஊடகங்களோ கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்று மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் சாடியுள்ளார்.

அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அஸ்ஸாமில் இதுவரை வெள்ளத்துக்கு 40 பேர் பலியாகிவிட்டன.

National media turning a blind eye to floods in NE, says Biren Singh

அஸ்ஸாமின் 23 மாவட்டங்களின் 15 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமின் காசிரங்கா சரணாலயத்தில் இருந்த விலங்குகள் வெள்ளத்தால் கர்பி மலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்துவிட்டன. அரிவகை ஒற்றை காண்டாமிருகங்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களின் மழைவெள்ளப் பாதிப்பு பெரும் துயரைத் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார். இதேபோல மத்திய அம்ச்சர் ரிஜிஜூ தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், சென்னை, காஷ்மீர் போல இல்லாமல் வடகிழக்கின் பேரழிவுகளை தேசிய ஊடகங்கள் புறக்கணித்து விட்டன என கவலை தெரிவித்திருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவுக்கு பதில் கொடுத்துள்ள மணிப்பூர் முதல்வர் பைரென்சிங், தேசிய ஊடகங்கள் முழுமையாகவே வடகிழக்கைப் புறக்கணித்துவிட்டன. தேசிய ஊடகங்கள் என்பது ஒட்டு மொத்த இந்தியாவுக்குமானதாக இல்லை... பிரதான நிலப்பகுதிக்கு மட்டும்தான் தேசிய ஊடகங்கள் என கொந்தளித்திருக்கிறார்.

English summary
Manipur CM Biren Singh slammed that the national medias are totally biased towards the north east. They are only for mainland not for the whole India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X