ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்துவிடுங்கள்: ஐநாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த 21-வயது யாஷிடி பெண்
நியூயார்க்: ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று 21-வயது யாஷிடி இனப் பெண் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகையே மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிரியா மற்றும் ஈராக் நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் குழந்தைகள், பெண்களை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து சந்தைகளில் விற்பனை செய்தும், கொன்று குவித்தும் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக ரஷ்யாவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான உக்கிர யுத்தம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடியில் சிக்கி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உயிர்பிழைத்த யாஷிடி இனப்பெண், தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று கண்ணீர் மலங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாஷிடி இனத்தைச் சேர்ந்த நாதியா முராத் பாசீ தாஹா தற்போது ஜெர்மனியில் அகதியாக உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஈராக்கில் இவரது கிராமத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். பின்னர் நாதியா முராத் பாசீ தாஹா உள்பட, அங்கிருந்த பெண்களை பஸ்சில் தீவிரவாதிகளின் தலைமையகமான மோசூல் நகருக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு சிறுமிகள், பெண்கள் என்று வேறுபாடு பார்க்காமல் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதுதொடர்பான உண்மை நிலையை அறிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 15 பேர் கொண்ட குழுவிடம் தாஹா தனக்கு நடந்த கொடுமை பற்றியும் அங்கு நடந்தவை பற்றியும் விவரித்துள்ளார்.
"பெண்கள் மற்றும் சிறுமிகளை அழிக்கும் ஆயுதமாக பாலியல் பலாத்காரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்களால் அடுத்து வாழவே முடியாது என்ற கொடூரம் அரங்கேற்றப்பட்டது. தீவிரவாதிகள் யாஷிடி இனப் பெண்களின் உடல்கள், இறைச்சியை போன்று விற்பனை செய்யப்பட்டது." என்று நாதியா முராத் பாசீ தாஹா கூறி உள்ளார்.
சில நாட்கள் கழித்து என்னை எடுத்துக் கொண்ட தீவிரவாதி, என்னை ஆடை அணிந்துக் கொள்ளுமாறும், அலங்காரம் செய்துக் கொள்ளுமாறும் கொடுமை செய்தான், பின்னர் அந்த பயங்கரமான இரவில் தான் கொடுமைகளை செய்தான். தீவிரவாதிகளுக்கு சேவை செய்ய வற்புறுத்தினான். என்னை தொடர்ந்து ஒவ்வொரு இரவும் அவமானப்படுத்தினான். இரவு என்னை கடுமையாக தாக்கினான். தீவிரவாதிகளுடன் அறையில் அடைத்தான். பின்னர் நான் சுயநினைவை இழக்கும் வரையில் அவர்கள் குற்றம் செய்தனர் என்று கூறி உள்ளார்.
என்னுடைய சகோதரர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்து உள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications