கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு
கோவை: சென்னையில் தான் சொந்த வீடு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் கூட வாங்குவது கடினமாக உள்ளது. கோவையில் நிலைமை அப்படி இல்லாமல் இருந்தது. ஆனால் கோவையிலும் கடந்த 4 ஆண்டுகளில் நிலத்தின் விலை மற்றும் கட்டுமானச் செலவு மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் நகருக்குள் சொந்த வீடு வாங்குவதை நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு கோவையில் ரியல் எஸ்டேட் சந்தை வளர்ந்துளளது. நிலத்தின் மதிப்பு கோவையில் ஐந்து இடங்களில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
சென்னையில் தான் நிலத்தின் மதிப்பு உச்சமாக இருந்து வந்தது. ஆனால் கோவையிலும் நிலத்தின் மதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதுபற்றி நெட்டிசன் ஒருவர் பகிர்ந்த கருத்துக்களை அப்படியே பார்ப்போம்.

கோவையில் கடந்த 4 ஆண்டுகளில் நிலத்தின் விலை மற்றும் கட்டுமானச் செலவு மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் நகருக்குள் சொந்த வீடு வாங்குவதை நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது
கோவையில் மண்டல வாரியாக நிலத்தின் விலை உயர்வு (2022 ➔ 2026):
முக்கிய பகுதிகளில் சதுர அடி நிலத்தின் விலை கடந்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது:
கோவையில் ஐடி காரிடரானா சரவணம்பட்டியில் சதுர அடி ₹3,500 - ₹4,500 ஆக இருந்த விலை இப்போது ₹6,000 - ₹8,000 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் அதேபோல் காளப்பட்டியில் (விமான நிலையம்/தொழிற்பேட்டை): சதுர அடி ₹2,500 - ₹3,500 ஆக இருந்தது, இப்போது ₹5,000 - ₹6,500 ஆக உயர்ந்துள்ளது.
விளாங்குறிச்சிடியில் (IT பூங்காக்கள் அருகே) சதுர அடி ₹2,800 - ₹3,800 ஆக இருந்த நிலையில் ₹5,500 - ₹7,000 ஆக உயர்ந்துள்ளது
கோவைபுதூர் பகுதியில் நிலைமை அதிரடியாக மாறி உள்ளது. ₹2,000 - ₹3,000 ➔ ₹4,000 - ₹5,500
பேரூர் / சுண்டக்காமுத்தூர்: ₹1,800 - ₹2,500 ➔ ₹3,500 - ₹5,000

அடுக்குமாடி குடியிருப்புகளின் நிலை
கோவை மா நகரின் முக்கிய மற்றும் நடுத்தர மண்டலங்களில் ஒரு சாதாரண 2BHK பிளாட் விலை தற்போது ₹70 லட்சம் முதல் ₹95 லட்சம் வரை உயர்ந்துள்ளது. அவினாசி சாலை மற்றும் மாநகர மையப்பகுதிகளில் ஒரு சதுர அடி விலை ₹8,000 முதல் ₹12,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்ந்தாலும், வீட்டின் பரப்பளவு 600 - 800 சதுர அடியாகக் குறைந்து வருகிறது.
கோவையில் தனி வீடு கட்ட ஆகும் செலவு
கோவை மாநகரின் வெளிவட்டப் பகுதிகளில் 1200 சதுர அடி நிலம் வாங்கவே தற்போது ₹50 - ₹80 லட்சம் தேவைப்படுகிறது. கட்டுமானச் செலவு சதுர அடிக்கு ₹2,200 - ₹3,000 வரை உயர்ந்துள்ளதால், ஒரு சாதாரண தனி வீடு கட்டி முடிக்க ₹1 கோடி முதல் ₹1.4 கோடி வரை செலவாகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏன் இந்த நெருக்கடி?
சம்பளம் vs சொத்து மதிப்பு படி பார்த்தால். ஆண்டுதோறும் மக்களின் சம்பளம் 5% - 8% மட்டுமே உயரும் நிலையில், சொத்துகளின் மதிப்பு 12% - 20% வரை உயர்ந்துள்ளது. முன்பு "மலிவு விலை" என்று கருதப்பட்ட கோவை மாநகரின் வெளிப்பகுதிகள் கூட இப்போது சாமானியர்களின் கைக்கு மீறிச் சென்றுவிட்டது. இதனால் சொந்த வீடு வாங்க முடியாத நிலை ஏற்படுவதால், நடுத்தர மக்கள் நீண்ட காலம் வாடகை வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தீர்வு என்ன?
கோவையின் சீரான வளர்ச்சியை அடைய மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் முறையான உள்கட்டமைப்புடன் நகரை விரிவாக்கம் செய்ய வேண்டும். நிலத்தின் விலையில் நடக்கும் ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மலிவு விலை வீடுகளுக்கு அரசு சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டும. நகர மையத்தின் நெருக்கடியைக் குறைக்க பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாநகரம் வேகமாக வளர்வது மகிழ்ச்சி அளித்தாலும், அந்த வளர்ச்சியில் நடுத்தர வர்க்கத்தினர் பின் தள்ளப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நெட்டிசன் ஒருவர் இந்த கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications