Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலில் விழுவதற்கு முன்பு ஓயாமல் அடித்த ஏர்ஏசியாவின் எச்சரிக்கை அலாரம்கள்

Subscribe to Oneindia Tamil

ஜகர்தா: இந்தோனேசிய கடலில் விழுவதற்கு முன்பு ஏர்ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம்கள் ஒரேநேரத்தில் ஒலித்துள்ளது கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி சிங்கப்பூரூக்கு 168 பேருடன் கிளம்பிய ஏர்ஏசியா விமானம் க்யூஇசட் 8501 ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்று அறிவிக்கப்பட்டது.

கடலில் இருந்து விமானத்தின் பாகங்கள் மற்றும் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அலாரம்

அலாரம்

விமானம் கடலில் விழுவதற்கு முன்பு அதில் உள்ள எச்சரிக்கை அலாரம்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒலித்துள்ளது கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளது.

விமானிகள்

விமானிகள்

அலாரம்கள் ஒரே நேரத்தில் ஒலித்ததால் விமானிகள் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. சிறிது நேரத்தில் அந்த சப்தம் அடங்கிவிடுவது கருப்பு பெட்டி பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது.

வேகம்

வேகம்

விமானம் மோசமான வானிலையை சந்தித்தபோது வழக்கத்திற்கு மாறாக அதிவேகத்தில் உயரத்தை அதிகரித்துள்ளது. பின்னர் நிலைதடுமாறி கடலில் விழுந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரணம்

காரணம்

விமானம் விபத்துக்குள்ளாகியதற்கான காரணத்தை தற்போதே கூறிவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+