Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிபிசி தலைமை அலுவலகம் அருகே மர்ம வாகனத்தால் பரபரப்பு !! வெடிகுண்டு பீதியில் ஊழியர்கள் வெளியேற்றம் !

Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டன் பிபிசி தலைமை அலுவலகம் அருகே மர்மமான வாகனத்தால் பரபரப்பு நிலவியது. இதனால் பிபிசி தலைமை அலுவல கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தவர்கள் உடனடியாக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிபிசி செய்தி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த பகுதியில் இன்று மதியம் மர்மமான வாகனம் ஒன்று நின்று கொண்டு இருந்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து வாகனத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற பீதியில் பிபிசி அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

bomb scare in central London at bbc

மேலும் அதனை சுற்றியுள்ள அலுவலகங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்த ஸ்காட்லாந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து அந்த பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் மேற்கொண்ட சோதனையில் அந்த வாகனத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

மத்திய லண்டன் பகுதியில் பிபிசி தலைமை அலுவலகம், சீனா, போலந்து நாட்டின் தூதரகங்கள், கென்ய நாட்டின் முக்கிய தலைமை அலுவலகம், பிரிட்டிஷ் கட்டிடக் கலை நிறுவனம், பள்ளிகள், ஹோட்டல்கள் என முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+