92 வயதில் இறந்து போன இந்தப் பாட்டிக்கு ஒரு காலத்தில் கென்னடியும், கடாபியும் 'கஸ்டமர்கள்' தெரியு்மா?
பாரீஸ்: உலகிலேயே மிக மிக மூத்த "பிராத்தல் ஹவுஸ் ஓனர்" இவராகத்தான் இருப்பார். 92 வயதில் இறந்துபோயுள்ள மேடம் கிளாடி, விபச்சாரத் தொழிலில் மிக நீண்ட காலம் இருந்தவர் ஆவார். இவரது வாடிக்கையாளர்கள் பட்டியலைப் பார்த்தால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள். பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.
உலக அளவில் பல விபச்சாரப் பிரபலங்கள் உள்ளனர். ஆனால் கிளாடிக்குத் தனி இடம் உண்டு இதில். பல விபச்சார அழகிகளை ஒருங்கிணைத்து பெரிய நெட் ஒர்க் அமைத்து மிகப் பெரிய தொழிலாக இதை செய்து வந்தவர் இவர்.
பிரான்சின் நைஸ் நகரில் அவர் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. அவரது மரணச் செய்தியே தாமதமாகத்தான் வந்துள்ளது.

மேடம் கிளாடி
நம்ம ஊரில்தான் விபச்சாரம் செய்தால் "அசிங்கம் அபிராமி அசிங்கம்" என்று முகத்தைச் சுளிப்பார்கள்.. ஊரை விட்டு ஒதுக்கி வைப்பர்.. ஆரும் அன்னம் தண்ணி புழங்கக் கூடாது என்றும் உத்தரவு போடுவார்கள். ஆனால் மேடம் கிளாடி சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்துடன் வலம் வந்தவர்.

பல துறையினருடன் சங்கமம்
இவரது தொடர்புகளைப் பார்த்தால் அசந்து விடுவீர்கள். அந்த அளவுக்கு மிகப் பெரியது. அரசியல்வாதிகள், டாக்டர்கள், பிற துறையினர், நடிகர்கள் என பல துறையினரும் இவரிடம் சங்கமித்துள்ளனர்.

தலைமுறை தலைமுறை
பல தலைமுறை வைத்தியர்கள் போல இவரும் பல தலைமுறைகளை தனது தொழிலில் பார்த்தவர் ஆவார். இருந்தாலும் தன்னை நம்பி வந்தவர்கள் சந்தோஷத்துடன் திரும்புவதை உறுதி செய்த "உத்தமி"யும் கூட.

கென்னடி முதல் கடாபி வரை
இவரது கஸ்டமர்களில் பலரும் விஐபிக்கள்தான். சாதா விஐபிக்கள் இல்லை பாஸ்.. மிகப் பெரிய ஜாம்பவான்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி, லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி, இத்தாலியின் கில்லாடி விளையாட்டுப் பிள்ளை முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, ஹாலிவுட் லெஜன்ட் மர்லன் பிரான்டோ, இஸ்ரேல் ராணுவ தளபதியாக இருந்தவரான மோஷே தயான், ஈரான் நாட்டு ஷா மன்னர், பியட் நிறுவன உரிமையாளர் ஜியோவன்னி அக்னல்லி ஆகியோர் இவரது விஐபி கஸ்டமர்களில் சிலர்.

பாரீஸுக்கு வந்தால் மறக்காமல்
இவர்கள் எல்லாம் பாரீஸுக்கு வந்தால் "மேடமைப்" பார்க்காமல் திரும்ப மாட்டார்களாம். அந்த அளவுக்கு கிளாடி மீது ஈர்ப்பும், அன்பும் கொண்டவர்கள் இவர்கள்.

குசும்பு புடுச்ச கென்னடி
இதில் கென்னடிதான் ரொம்ப குசும்பு புடிச்சவராம். அதாவது மேடம் கிளாடியிடம் இவர் எனது மனைவி ஜாக்குலின் போலவே எனக்கு பெண் வேண்டாம். ஆனால் ஜாக்குலின் போல இருக்கக் கூடாது, அவரை விட ஹாட்டாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பாராம்... பார்ரா!

அரசியல்வாதியின் மகள்
கிளாடியின் இயற்பெயர் பெர்னான்ட் குரூடெட் என்பதாகும். இவரது தந்தை அரசியல்வாதி என்று கூறப்படுகிறது. ஆனால் தெளிவான தகவல் இல்லை. ஆரம்ப காலத்தில் வீடு வீடாகப் போய் பைபில் விற்று வந்தார்.

1961 முதல் விபச்சாரம்
1961ம் ஆண்டு தனது விபச்சார விடுதைய்த திறந்தார். சிறிய அளவில்தான் முதலில் நடத்தினார். ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் அ்து மிகப் பெரிய ஸ்தாபனம் போல விரிவடைந்தது. கிட்டத்தட்ட 500 "அன்னங்களுடன்" (swan) (அவர் அப்படித்தான் தனது விபச்சார அழகிகளை அழைப்பாராம்) தொழிலில் கொடி கட்டிப் பறந்தார்.

ரேட் ஜாஸ்திதான்
இவருடைய விபச்சார விடுதிக்கு வந்து அழகிகளுடன் உல்லாசமாக இருக்க விரும்பினால் ஒரு நாள் இரவுக்கு 10,000 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும். நமது தேவைக்கேற்ப, நமது விருப்பத்திற்கேற்ற பெண்ணைத் தேர்வு செய்து கொடுப்பார்.

டியூஷன் வைத்து திறமைகளை வளர்த்தவர்
தனது விபச்சார விடுதியில் இருந்த அழகிகளை விபச்சாரப் பெண்களாக மட்டும் பார்த்ததில்லை கிளாடி. மாறாக அவர்களுக்கு பல்வேறு நாட்டு கலாச்சாரம், கலை உள்ளிட்டவற்றையும் கற்றுக் கொடுத்துள்ளார். அவர்களை அவ்வப்போது வெளிநாடுகளுக்கு டூர் அனுப்பி வைப்பார். பல்வேறு நாட்டு மொழிகளையும் கற்க ஊக்கம் கொடுப்பாராம்.

உணவுக்கும், செக்ஸுக்கும்
1994ல் இவர் எழுதிய மேடம் எனற சுயசரிதை நூலில் இப்படி ஒரு வார்த்தையை எழுதியிருப்பார்.. "இந்த உலகில் இரண்டு விஷயத்திற்காக மட்டும்தான் மக்கள் பணத்தை செலவழிப்பார்கள்.. உணவுக்கும்,செக்ஸுக்கும். எனக்கு சமைக்க வராது.. எனவேதான் செக்ஸில் இறங்கினேன்".
எவ்வளவு உண்மையான வார்த்தை.. மரணத்தில் அவர் அமைதி கொள்ளட்டும்!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications