Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈராக்கில் பழங்கால சிலைகள், கைவினைப் பொருட்களை அடித்து நொறுக்கிய ஐஎஸ்ஐஎஸ்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஈராக்கின் மொசுல் நகரில் இருந்த பழமை வாய்ந்த கைவினைப் பொருட்கள், சிலைகளை சம்மட்டியால் அடித்து உடைத்த வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள நகரமான மொசுல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது. அந்த நகரில் உள்ள நினேவா அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த பழமை வாய்ந்த கைவினைப் பொருட்கள், பல சிலைகளை சம்மட்டியால் அடித்து உடைத்தனர். இந்த செயலை அவர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

New IS video shows militants smashing ancient Iraq artifacts

மொசுல் நகரில் உள்ள அகழ்வாராய்ச்சி தளத்திற்கு சென்ற தீவிரவாதிகள் அங்கிருந்த 7ம் நூற்றாண்டு காவல் தெய்வத்தின் சிலையை உடைத்துவிட்டனர். அந்த வீடியோவில் தாடி வைத்த நபர் ஒருவர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது,

ஓ முஸ்லீம்களே, எனக்கு பின்னால் இருக்கும் கைவினைப்பொருட்கள், சிலைகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் கடவுளாக வணங்கியுள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு இந்த சிலைகளை வணங்கியுள்ளனர். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் போர், விவசாயம் மற்றும் மழை வேண்டி இந்த கடவுள்களுக்கு பலி கொடுத்துள்ளனர் என்றார்.

இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் முஸ்லீம்களின் பிரபல புனித தளங்களையும் இடித்துத் தள்ளியுள்ளனர். தீவிரவாதிகள் பழமையான கைவினைப் பொருட்களை கள்ள மார்க்கெட்டில் விற்று நிதி திரட்டியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+