பாரீஸில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு: பெண் தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை
பாரீஸ்: பாரீஸின் புறநநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் போலீசார் 7 பேரை கைது செய்தனர்.
பாரீஸ் தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் தப்பியோடியுள்ளார். பாரீஸின் புறநநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் போலீசார் அந்த தீவிரவாதியை இன்று அதிகாலை தேடினர். அப்போது ஒரு வீட்டில் இருந்த 3 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் அவர்களை நோக்கி சுட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீசார் பலர் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்குள் பதுங்கி 2 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைப்படை தாக்குதல் நடந்த ஸ்டேடியத்திற்கு அருகே தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாரீஸ் தாக்குதல்கள் வழக்கு தொடர்பாக போலீசார் இன்று 7 பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகினர். இதையடுத்து தப்பியோடிய தீவிரவாதிகளை தேட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அப்படி ஒரு சோதனையின்போது தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications