Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணு ஆயுதம்.. அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. பிரம்மாஸ்திரத்தை.. சோதனை செய்யும் ஈரான்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈரான் வெகுவாக முன்னேற்றம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில்.. முடிந்தால் 24 மணி நேரத்திற்குள் அணு ஆயுத சோதனை நடத்தும் அளவிற்கு ஈரான் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அணு ஆயுதத்தை தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளை தொடர்ந்து செய்வோம். அதை அமெரிக்காவால் தடுக்க முடியாது. அமெரிக்கா இதில் தலையிட முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு ஈரான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

Iran

அணு ஆயுத யுரேனியம்

அணுவை வெறுமனே அணு ஆயுதம் உருவாக்க பயன்படுத்த முடியாது. யுரேனியத்தை அப்படியே எடுத்து அணு குண்டு போட முடியாது. அதை பயன்படுத்தும் முன் செறிவூட்ட வேண்டும். ஈரான் இப்போது யுரேனியத்தை 60-90 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும். ஆனால் இதில் சிக்கலே.. ஹிஸ்புல்லா இயக்கம் தற்போது சேதங்களை சந்தித்து உள்ளதால்.. அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கு சில வாரங்கள் ஏற்படலாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தினார். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலகைகள் மீது அமெரிக்க அதிபர் தாக்குதல் நடத்தினார்.. ஆனால் எஸ்பஹான், நடான்ஸ் மற்றும் ஃபோர்டோவ் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அங்கிருந்த யுரேனியத்தை ஈரான் வெளியே எடுத்து சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன. இதற்கான செயற்கைகோள் புகைப்படங்களும் வெளியாக உள்ளன.

ஜூன் 19-20 தேதிகளில் அந்த அணு வசதியின் நுழைவாயிலுக்கு அருகில் கனரக இயந்திரங்களுடன் 16 லாரிகள் கூடியிருந்தன. இதற்கான படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாப்பின் மூத்த ஆலோசகர் மெஹ்தி முகம்மதி சமூக ஊடகத்தில் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ஃபோர்டோ மீது பல இரவுகளாக தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எதிர்பார்த்து இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்

அமெரிக்காவின் தாக்குதல்கள் குறித்து மெஹ்தி முகம்மதி மேலும் கூறுகையில், "அந்த தளம் நீண்ட காலத்திற்கு முன்பே காலி செய்யப்பட்டது. அதனால் பெரிய சேதம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. அறிவை யாராலும் வெடிகுண்டு போட்டு அழிக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான்- இஸ்ரேல் போருக்குள் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நுழைந்து உள்ளது. அமெரிக்கா இதில் நேரடியாக தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளதால்.. அடுத்த கட்டமாக ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள், ஈரான் ஆதரவு நாடுகள் போரில் தலையிட வாய்ப்புகள் உள்ளன.

ஈரானை தாக்கிய அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.

இப்படிப்பட்ட நிலையில்தான் அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈரான் வெகுவாக முன்னேற்றம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில்.. முடிந்தால் 24 மணி நேரத்திற்குள் அணு ஆயுத சோதனை நடத்தும் அளவிற்கு ஈரான் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+