சென்னையில் அதிகாலை முதல் மீண்டும் கச்சேரியை தொடங்கிய மழை: மீட்புப்பணிகள் முடங்கும் அபாயம்
சென்னை: சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் தேங்கியுள்ள வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை எப்போது திரும்புமோ என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் சென்னைவாசிகள்.
சென்னையில் காலை 6 மணியளவில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பகுதிகளில் கனமழை பெய்தது. எழும்பூர், தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி ,பட்டினப்பாக்கத்தில் மழை கொட்டுகிறது புறநகரிலும் மழை பெய்வதால் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சூளைமேடு, தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், மந்தைவெளி, புழுதிவாக்கம், மேடவாக்கம், நங்க நல்லூர், எழும்பூர், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் பலத்த மழை அரைமணி நேரத்திற்கு ஒருமுறை விட்டு விட்டு பெய்து வருகிறது. மீண்டும் வெள்ளநீர் தேங் இதனால் நிவாரணம், மீட்புபணிகள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை
வட கடலோரம் மற்றும் இலங்கை அருகில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக இலங்கை மற்றும் அதையடுத்த குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது.

இரவில் சாரல்மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பகல் நேரத்தில் விட்டுவிட்டு பெய்து வந்த மழை இரவு நேரத்திலும் சாரல் மழையாக இருந்தது. டிசம்பர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 9ம் தேதி ஓரிரு பகுதிகளிலும், 10ம் தேதி கடலோர ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை முதல் மழை
அதன்படி தொடர்ந்து இன்று அதிகாலை காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது
காலை 6 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. 10 மணிக்கு தொடங்கிய மழை விடாமல் கொட்டி வருவதால் வெள்ளம் தேங்கத் தொடங்கியுள்ளது. இதனால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

உணவு, குடிநீர் விநியோகம்
வெள்ளத்தினால் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்களும், ராணுவத்தினரும் செய்து வருகின்றனர். மழையால் நிவாரணம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சியில் மழை
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. திருவள்ளூரிலும், செம்பரம்பாக்கம் ஏரி பகுதிகளிலும் கனமழை கொட்டி வருவதால் மீண்டும் ஏரியில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறக்கப்படலாம் என்ற அச்சம் சென்னைவாசிகளிடையே எழுந்துள்ளது.

காற்றுச்சுழற்சி
ஸ்கைமெட் வானிலை மையத்தின் அறிக்கையின்படி, தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்த நிலை கொண்டுள்ளது. மேலும் தரைப் பகுதியில் இருந்து 4.5 கி.மீ. உயரம் வரை கடுமையான காற்றுச் சுழற்றியும் (Cyclonic circulation ) பரவிக் கிடக்கிறது.

லட்சத்தீவு காற்றுச்சுழற்சி
இது தவிர அரபிக் கடலில் லட்சத் தீவுகள் அருகே இன்னொரு கடுமையான காற்றுச் சுழற்றியும் உருவாகியுள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர காலகட்டத்தில் தமிழகத்தில் கூடலூரில் 98 மிமீ மழையும், சென்னையில் 21 மி.மீயும், காரைக்காலில் 22 மி.மீயும், பாம்பனில் 9 மி.மீயும், கோவையில் 12 மி.மீயும், நாகப்பட்டினத்தில் 23 மி.மீயும் மழை பெய்துள்ளது.

சென்னைவாசிகள் அச்சம்
அடுத்த 12 மணி நேரத்தில் சென்னையில் பலத்த மழை பெய்யும். தமிழகத்தின் பிற வட கடலோர மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்யும் என்று ஸ்கைமெட் வானிலை மையம் எச்சரித்துள்ளதால் சென்னைவாசிகள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications