சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த தாய்–மகள் கழுத்து அறுத்து படுகொலை
அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த தாய், மகள் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் ஹேமலதா தனது மகள் ஜெயலட்சுமியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவர்கள் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டம் விட்ட கொள்ளை கும்பல் ஒன்று ஹேமலதா வீட்டிற்கு சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஹேமலதா, ஜெயலட்சுமி ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி சைதாப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த தாய், மகள் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications