Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1,000 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 65 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.85 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். கடந்த 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது. நாடு முழுக்க பல்வேறு கிளைகளுடன் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வருகிறது.

Punjab and Sind Bank Punjab amp amp Sind Bank Bank Jobs Government Jobs Employment chennai

பணியிடங்கள் விவரம்:

தற்போது பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 உள்ளூர் வங்கி அதிகாரிகள் (JMGS I பிரிவு) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் நாடு முழுக்க உள்ள வங்கி கிளைகளில் ஏதேனும் ஒன்றில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த பணியிடங்கள் நிரந்தர அடிப்படையிலான பணியாகும்.

சத்தீஸ்கர் - 80, குஜராத் - 125, இமாச்சலப் பிரதேசம் - 20, ஜார்க்கண்ட் - 10, கர்நாடகா - 60, கேரளா - 10, மத்தியப் பிரதேசம் - 60, மகாராஷ்டிரா - 60, ஒடிசா - 80, தெலுங்கானா - 30, உத்தரப் பிரதேசம் - 200, அருணாச்சலப் பிரதேசம் - 15, அஸ்ஸாம் - 50, நாகாலாந்து - 05, மேற்கு வங்கம் - 30, பஞ்சாப் - 100. தமிழ்நாட்டில் 65 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கியின் இரண்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு வணிக வங்கி அல்லது மண்டல கிராமப்புற வங்கியில் அதிகாரியாக குறைந்தபட்சம் 18 மாத கால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

2026 மார்ச் 1 நிலவரப்படி வயது வரம்பானது கணக்கிடப்படும். அதாவது விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். (1996 மார்ச் 2-க்கு முன்னரோ அல்லது 2006 மார்ச் 1-க்கு பின்னரோ பிறந்திருக்க கூடாது - இந்த இரண்டு தேதிகளும் சேர்த்து).

அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC NCL) 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பிள் தளர்வுகள் அளிக்கப்படும்.

Election 2026

சம்பளம் எவ்வளவு?

தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூர் வங்கி அதிகாரிகள் பணியிடங்களுக்கு மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை ஊதியம் வழங்கப்படும். இந்த சம்பள விகிதம், பல்வேறு படிகளும் சலுகைகளும் அடங்கியதாகும்.

தேர்வு முறை:

தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் உள்ளூர் மொழித் திறன் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மொழித் திறன் கட்டாயம் ஆகும். தமிழகத்தில் உள்ள பணியிடம் என்றால் தமிழ் மொழி கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுப் பிரிவுகளில் ஆங்கில மொழி (30 கேள்விகள், 30 மதிப்பெண்கள்), வங்கி அறிவு (40 கேள்விகள், 40 மதிப்பெண்கள்), பொது அறிவு/பொருளாதாரம் (30 கேள்விகள், 30 மதிப்பெண்கள்) மற்றும் கணினி திறன் (20 கேள்விகள், 20 மதிப்பெண்கள்) ஆகியவை அடங்கும்.

தமிழகத்தில் தேர்வு மையங்கள்

தமிழ்நாட்டில் தேர்வு மையங்களாக சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் விரும்பிய தேர்வு மையத்தை விண்ணப்பிக்கும்போது தேர்ந்தெடுக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் பட்டியல் சாதிகள் (SC)/பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ₹100/- ஆகும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ₹850/- ஆகும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://punjabandsind.bank.in/ இன் 'Careers' என்ற பக்கத்திற்குச் சென்று, அனைத்து வழிமுறைகளையும் கவனமாகப் படித்து, 2026 மார்ச் 31 முதல் 2026 ஏப்ரல் 20க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+