ஓபிஎஸ்க்கு மேட்டூர் எம்எல்ஏ செம்மலை திடீர் ஆதரவு- சசிகலா தரப்பு அதிர்ச்சி

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மேட்டூர் எம்எல்ஏ செம்மலை ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் உடன் சேர்ந்து 9 எம்எல்ஏக்க

Subscribe to Oneindia Tamil
சென்னை : அதிமுகவின் சீனியர் எம்எல்ஏவான செம்மலை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ்க்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சசிகலா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

ஆளும்கட்சியான அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. சசிகலா அணி, ஜெயலலிதா அணி என பிரிந்துள்ளதால், தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. முதல்வர் நாற்காலி யாருக்கு என்பதில் ஓ. பன்னீர் செல்வம், சசிகலா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

S Semmalai MLA joins OPS camp

சசிகலா தனக்கு 129 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்று கூறி ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை வலியுறுத்தி வருகிறா்ர. சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க தயார் என்று பன்னீர் செல்வம் கூறி வருகிறார்.

சமீபத்தில் சசிகலாவை ஆதரித்து பேட்டியளித்து வந்த சிலர் தற்போது அணிமாறி ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு 11 அ.தி.மு.க. எம்.பி்.க்களுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தனர். எம்எல்ஏக்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கூவத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து ஆதரவு தெரிவித்துள்ளார் மதுரை எம்எல்ஏ சரவணன்.

இந்த நிலையில் இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் மேட்டூர் தொகுதி எம்எல்ஏவுமான செம்மலை இன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சொன்னதால் ஜூனியரான ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொண்டோம். சீனியர்களுக்கு இருந்த பொறுமை ஜூனியர் பன்னீர்செல்வத்துக்கு இல்லை எனவும் செம்மலை தெரிவித்திருந்தார். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்றனர். இதனால் ஆளுநர் நிச்சயம் சசிகலாவை ஆட்சி அமைக்க கோருவார் எனவும் செம்மலை கூறியிருந்தார். இன்று அவரே ஓபிஎஸ் அணிக்கு மாறியுள்ளார். ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சசிகலா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

English summary
In boost for Panneerselvam, AIADMK senior MLA S.Semmalai join OPS camp.
Please Wait while comments are loading...