என்னுடைய ஆட்டம் இனிமேல்தான்.. சம்பந்தப்பட்டவர்களால் தாங்க முடியாது.. சசிகலா புஷ்பா மிரட்டல்!

By:

சென்னை: தம்மிடம் பல ரகசியங்கள் இருப்பதாகவும் அதை வெளியில் போட்டுடைக்கும்போதுதான் தம்முடைய உண்மையான ஆட்டம் ஆரம்பமாகும்; அதை சம்பந்தப்பட்டவர்களால் தாங்கவே முடியாது என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

நக்கீரன் இதழுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

கேள்வி: உங்களுக்கு எம்.பி. பதவியைக் கொடுத்த ஜெயலலிதாவே, பதவியை ராஜினாமா செய் என உத்தரவிட்டும் நீங்கள் செய்யாதது கட்சித் தலைமைக்கு செய்யும் துரோகமில்லையா?

பதில்: நான் எதுக்கு மனசாட்சிக்கு விரோதமா நடந்துக்கணும்? என்னுடைய உழைப்புக்காக கொடுக்கப்பட்ட பதவியை நான் எதுக்கு இழக்கணும்? சசிகலா மாதிரி சிலர் இருக்காங்க. வீட்டை விட்டு போன்னு சொன்னா போய்டுவாங்க. அப்புறம் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துட்டு வந்துடுவாங்க.

ஜெ.வைவிட உழைத்திருக்கிறேன்

அதை நாங்க பண்ண முடியாது. தலைமையை விட அந்த கட்சிக்கு நான் நிறைய உழைச்சிருக்கேன். அதனால துரோகம் பண்ணிட்டேன்னு யாரும் என்னை குற்றம்சாட்ட முடியாது.

துரோகப் பட்டியல் இது..

நம்பி வந்தவங்களுக்கு துரோகம் செய்றது அவங்களுக்குத்தான் பழக்கம். சட்டமன்றத்துல அவங்களை (ஜெ.) அவமானப்படுத்திய வீரபாண்டி ஆறுமுகத்தை அடித்து மூக்கை உடைத்த தாமரைக்கனியையும் அவரது குடும்பத்தையும் வரவழைத்து கேவலப்படுத்தி அனுப்பியது, சாத்தான்குளம் மற்றும் சைதாப்பேட்டை இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிக்காக உழைத்த வெங்கடேசப்பண்ணையாரை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளியது என துரோகம் செய்தது அவங்கதான்.

பின்னணியில் யார்?

கேள்வி: அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் வந்ததில்லை. ஆனா, உங்களுக்கு வந்திருக்கிறது. அந்த துணிச்சலுக்கு காரணம், தி.மு.க. எம்.பி. கனிமொழியும், தொழிலதிபர் வைகுண்டராஜனும் கொடுத்து வரும் ஆதரவும், பா.ஜ.க. தலைவர்களின் ஒத்துழைப்பும்தான் என்று சொல்லப்படுகிறதே?

வைகுண்டராஜன் ஒரு தொழிலதிபர். அவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. கனிமொழி, தி.மு.க. என்கிற ஒரு பெரிய இயக்கத்தின் மகளிர் அணிச்செயலாளர். அந்த கட்சியின் எம்.பி.யாகவும் இருக்கிறார். அவர்களுக்கும் அரசியல் ரீதியாக ஏகப் பட்ட பணிகள் இருக்கு. அப்படிப்பட்ட நிலையில், என்னை இயக்க வேண்டிய அவசியம் அவங்களுக்கு எதுக்கு?

 

 

சொல்லாத ரகசியங்கள்...

எனக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் பலரும் உண்மையைக் கேட்டிருக்காங்க. இன்னும் சொல்லாத பல ரகசியங்கள் என்னிடம் இருக்கின்றன.

ஆட்டம் அப்ப ஆரம்பிக்கும்...

அதையெல்லாம் போட்டுடைக்கும்போதுதான் என்னுடைய உண்மையான ஆட்டம் ஆரம்பமாகும். அதை சம்பந்தப்பட்டவர்களால் தாங்கமுடியாது!

இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

 

English summary
Expelled ADMK MP Sasikala Pushpa has warned to ADMK leaders.
Please Wait while comments are loading...

Videos