திமுக எம்.எல்.ஏக்களின் காமெடி கலாட்டா... கலகலப்பாக நடந்த போட்டி சட்டசபை
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட வந்தவர்களுக்கு நேற்று கோட்டை வளாகத்தில், தி.மு.க எம்.எல்.ஏக்கள் நடத்திய போட்டி சட்டசபை கூட்டம் காமெடி கலாட்டாவாக அமைந்தது.
சட்டசபையிலிருந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட, திமுக எம்.எல்.ஏ.,க்கள், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தலைமை செயலகம் வந்தனர்.
அவர்கள் வருவார்கள் இன்றும் தர்ணா செய்வார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த சட்டசபை காவலர்கள், அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
காலை, 10.15 மணிக்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் வந்தனர். பின், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே, மாதிரி சட்டசபை கூட்டத்தை துவக்கினர்.

போட்டி சட்டசபை
துரைமுருகன், சபாநாயகராக செயல்பட்டார். அவரின் இரு புறத்திலும் நாற்காலிகள் போடப்பட்டன. சட்டசபையில் அமர்வது போல், எதிரெதிராக வரிசையாக அமர்ந்தனர். துரைமுருகன் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்தார். திருக்குறள் கூறி, சபையை துவக்கினார். 'முதலில், கேள்வி நேரம்' என, அறிவித்தார்.
கேள்வி நேரம்
சவுந்தரபாண்டியன்: என் தொகுதியில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது இப்பிரச்னைக்கு அரசு தீர்வு காணுமா? என்று கேட்டார்.

ஏ.வா. வேலு
நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்ட வேலு: முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உங்கள் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றார்.

ஜெ. அன்பழகன் வாய்ப்பு
அடுத்து, ஜெ.அன்பழகன் வாய்ப்பு கேட்டார். அதற்கு துரைமுருகன் எழுந்து அன்பழகன், நீங்கள் உங்கள் இருக்கையில் போய் அமருங்கள்; உங்களுக்கு, நான் வாய்ப்பு தரவில்லை. நீங்கள் பிரச்னை செய்கிறீர்கள் என்று தான் கடைசி இருக்கையில், 'சீட்' ஒதுக்கினேன். அதன்பிறகும், நீங்கள் திருந்தவில்லை என்றார்.

சபைக்குறிப்பில் இடம் பெறாது
உங்கள் தலைவர் பேச்சுக்கும் கட்டுப்பட மாட்டேன் என்கிறீர்கள், என் பேச்சுக்கும் கட்டுப்பட மறுக்கிறீர்கள்; பேசாமல் அமருங்கள். உறுப்பினர்கள் யாரும் குற்றச்சாட்டு கூறக் கூடாது. அன்பழகன் பேசியது, எதுவும் சபைக்குறிப்பில் இடம்பெறாது. இவ்வாறு துரைமுருகன் கூறியதும், அன்பழகன் தொடர்ந்து பேச, துரைமுருகன் குறுக்கிட்டு, அப்படி எல்லாம் நீங்கள் பேசக் கூடாது, என்று தனபால் கூறுவது போல மிமிக்ரி செய்தார்.

காமெடி கலாட்டா
அப்போது, சில எம்.எல்.ஏக்கள் எழுந்து, அப்படி எல்லாம் பேசக் கூடாது என்றால் எப்படி பேசுவது, என, கேட்டனர்.
தொடர்ந்து ஒரு எம்.எல்.ஏ 'சபையில் இருக்கிறவர்கள் முதல்வரை வணங்குகிறோம் எனக் கூறி, அவர் இருக்கும் திசையை நோக்கி வணங்குகின்றனர்' என்றார் உடனே, ''நீங்கள் பேசியது எல்லாம் சபைக்குறிப்பில் ஏறாது என, துரைமுருகன் அறிவித்தார்.

ஜெ. அன்பழகன் பேச்சு
பலரும் பேச வாய்ப்பு கேட்கவே துரைமுருகன் எழுந்து நின்று அன்பழகன் நீங்கள் பேசுங்கள்,'' என்றார். உடனே அன்பழகன் தொட்டில் குழந்தை திட்டத்திற்கு, ஆயா தொட்டில் குழந்தை திட்டம் என, பெயர் சூட்ட வேண்டும் என்று கூறினார்.

தனபால் பாணியில்
உடனே துரைமுருகன் இதற்கு தான் உங்களுக்குவாய்ப்பு தருவதில்லை; நீங்கள் பேசியது நீக்கப்படுகிறது. நான்,ஏன் அன்பழகனுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதில்லை என்பது தெரிகிறதா? என்று சபாநாயகத் தனபால் பாணியில் கேட்டார். அவரது உடல்மொழியைப் பார்த்து சிரிப்பலை எழுந்தது.

பயமான இருக்கே
சபாநாயகரைப் பார்த்த அன்பழகன் உங்களை பார்த்தால் பயமாக உள்ளது என்று கூறினார். அதற்கு துரைமுருகன் நான் என்ன புலியா பயப்படுவதற்கு என்று கேட்டார்.

தொல்லையா போச்சு
ஆயிரம் விளக்கு தொகுதி பிரச்னை குறித்து பேச விரும்புகிறேன் என்று கு.க.செல்வம் கூறினார். அதற்கு துரைமுருகன் நீர் என்ன மொழி பேசுகிறீர்? என்று கேட்டார். உடனே செல்வம் தமிழ் தான் பேசுகிறேன் என்று கூறினார்.

கவன ஈர்ப்பு தீர்மானம்
அப்போது, அன்பழகன் ஏதோ கூற, துரைமுருகன் எழுந்து, எப்போது பார்த்தாலும் எனக்கு தொல்லை தருவதே வேலையாக போய்விட்டது. சபையில், நான் கூறுவது தான் சட்டம் என்றார். தொடர்ந்து அவர், கேள்வி நேரம் முடிந்தது. உறுப்பினர் ராஜேந்திரன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம், விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. ராஜேந்திரன் சீக்கிரம் கூறி முடியுங்கள், என்றார்.

டெங்கு காய்ச்சல்
ராஜேந்திரன் பேசும் போது டெங்கு காய்ச்சலால், கடந்த வாரம், ஏழு பேர் இறந்துள்ளனர் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது என்றார்.
சுகாதார அமைச்சராக மாறிய பொன்முடி, இதுகுறித்து, இப்போது தான் உறுப்பினர் கூறி உள்ளார். காலையில், பத்திரிகை படிக்கவில்லை, பத்திரிகை படிக்கிற பழக்கமும் கிடையாது. நீங்கள் கூறியதை அம்மாவின் கவனத்திற்கு கொண்டு சென்று, அது பரவாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நிறைவேற்றுவோம் என்று கூறினார்.

வெட்டுத்தீர்மானம்
அடுத்து, மானிய கோரிக்கை விவாதம் துவங்குகிறது என்ற துரைமுருகன், நீங்கள் எது பேசினாலும், சபைக்குறிப்பில் ஏறாது என்றார். பலரும் பேச ஆரம்பிக்கவே, மானிய கோரிக்கை துவங்கி விட்டது. இப்போது, எதிர்க்கட்சி தலைவர் வெட்டு தீர்மானத்தை முன்மொழிகிறார்.

காவிரி பிரச்சினை
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார், காவிரி பிரச்னையை மையமாக வைத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஒன்றிணைந்து, தங்கள் உணர்வை வெளிப்படுத்து கின்றன; இங்கு, தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, பிரதமரை நேரில் சந்தித்துமுறையிட வேண்டும்.

இப்படி பேசக்கூடாது
சுதர்சனம் எம்.எல்.ஏ பேசும் போது ஆர்.கே.நகரில் நிலத்தடி நீருடன் ஆயில் கலந்து வருகிறது. பத்திரிகையில் வந்த செய்தியை காண்பித்தார். அதற்கு துரைமுருகன் இப்படி எல்லாம் காட்டக்கூடாது என்றார்.

செம்பரம்பாக்கம் ஏரி
கு.க.செல்வம் பேசும் போது, செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதால் வெள்ளம் ஏற்பட்டது என்றார். உடனே ஸ்டாலின், சி.பி.ஐ., விசாரணை நடத்த, கருணாநிதி தலைமையில் கவர்னரிடம் மனு கொடுத்தோம். தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

நிறைவடைந்த கூட்டம்
இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருந்த போது, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த, தி.மு.க., - காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏக்கள் அங்கு வந்தனர். சபையில் நடந்ததை நேரு விளக்கினார். அதைத் தொடர்ந்து, காலை, 11மணிக்கு, போட்டி சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

ரசித்து சிரித்த காவலர்கள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் சட்டசபைக்கு வந்த பொதுமக்களும், தி.மு.கவினர் நடத்திய காமெடி கலாட்டாவை ரசித்து சிரித்தனர். போராட்டம் காமெடியாக மாறியதால் கைது நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications