Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமூகமே... ஸ்வாதியும் உன் ரத்தமே... என்ன செய்யப் போகிறாய் உன் சகோதரியின் கொடூரக் கொலைக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் பெண் சுவாதி படுகொலை தொடர்பாக ஒன்இந்தியா வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்.

உங்கள் பார்வைக்கு:

வில்பர்ட் செ துரை

Swathy murder case: Oneindia readers comment

சகோதரி ஸ்வாதி கொலை பற்றி நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஓரளவு செல்வாக்கு பெற்ற தொழிலதிபர் மற்றும் ஊடகங்களிலும் ஆளுமை பெற்றவர். நான் அவரிடம் கேட்டேன், "அண்ணன்! நான் மட்டுமோ அல்லது நீங்கள் மட்டுமோ அந்த இடத்தில் நாம் செய்திருப்பது வேறு. நாம் இருவரும் சேர்ந்து அங்கிருந்தால் செய்திருப்பது வேறுதானே? என்று கேட்டேன்.

ஒருவேளை தனியாக இருந்திருந்தால் கூச்சலிட்டிருப்பேன் அல்லது ஏதாகிலும் தூக்கி எறிந்திருப்பேன் அல்லது வீடியோ எடுத்திருப்பேன் (இது மேற்கண்ட இரண்டையும் செய்ய முடியாத சூழலில் மட்டுமே). சம்பவ இடத்தின் வெளியிலிருப்பவர்கள் வீடியோ எடுத்த அந்த நபரை விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள், ஆனால், அந்த சூழ்நிலையில், அந்த செய்கை ஒரு மூன்றாம் கட்ட நடவடிக்கை தான். ஆனால், நாம் இருவரும் அங்கே இருந்தால் கண்டிப்பாக , அந்த நபரைத் தாக்கியிருப்போம். அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் வாய்ப்பு அதிகம். இது நாங்கள் பேசிக் கொண்டது.

ஆகவே, என்னதான் வீராவேசமாகப் பேசினாலும், அந்த இடத்தில் நாம் செயல்பட, இன்னொருவரின் ஒத்திசைவு தேவைப்படுகிறது. இங்கே அடிப்படை பிரச்சினையாக நாம் பார்க்க வேண்டியது என்னவெனில், ஒத்திசைவு அளிக்கும் அந்த இன்னொருவர், அங்கிருந்த நூறிலொருவராய் இருப்பார் என்ற அந்த நம்பிக்கை நமக்கு இல்லை. அநேக நேரங்களில் அதுதான் நிதர்சனம். உதாரணத்திற்கு, பேருந்தில் நடத்துனருக்கும் ஒரு பயணிக்கும் வாக்குவாதம், தவறு நடத்துனர் பேரில்தான். நான் பயணிக்கு உதவியாக குரலெழுப்புகிறேன், ஆனால் எவரும் என்னுடன் ஓர் வார்த்தை கூட சொல்ல முன்வரவில்லை. இந்த சூழ்நிலையைக் கடந்து வந்த எனக்கு, அந்த ஒத்திசைவான நபர், நூறிலொருவராய் இருப்பார் என்ற நம்பிக்கை உண்டாகவில்லை, நான் உதவி செய்யத் தயங்குகிறேன்.

அதே வேளையில், தாக்கப்படும் நபர் என் நண்பராகவோ, ரத்த சொந்தமாகவோ இருந்தால் நான் கண்டிப்பாக போராடியிருப்பேன். ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்க வேண்டுமெனில், சுயநலம் தலைதூக்காமல் இருப்பது அவசியம்.

1. அடிப்படைக் கல்வியிலிருந்தே, உதவி செய்யும், தவறைத் தட்டி கேட்கும் மனப்பான்மையை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.

2. கூட்டாற்றலின் (combined energy - synergy ) பலத்தை உணர்ச்சி செய்ய வேண்டும்.

3. வாழ்வியல் நன்னெறிகளை மனதளவில் வளர்த்தெடுக்க வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உணர்வுப் பூர்வமாய் பார்க்க பழக்குவிக்க வேண்டும்.

இவையெல்லாம் நிரந்தரத் தீர்வான ஆரோக்கியமான சமுதாயத்திற்கான தொலைதூரப் பாதை.

உடனடித் தீர்வென்பது,

1. பாதுகாப்பு கலைகளைக் (தற்காப்பு) கற்றுக் கொடுப்பது, பாதுகாப்புக்கு கருவிகளைக் (pepper spray, சிறிய கத்தி) கையாளக் கற்றுக் கொடுப்பது
2. பாதுகாப்பான சூழலை உருவாக்குவது (போதிய கண்காணிப்புக்கு காமிராக்கள், காவலர்கள்)
3. தண்டனைகள் கடுமையாக்குவது, குற்றவாளிகள் அரசியல், சாதி செல்வாக்கினை பயன்படுத்தி தப்பும் வழிகளில்லாமல் பார்த்துக் கொள்வது
4. உதவ ஆயத்தமானவர்களின் மனதிலுள்ள தயக்கம்(கோர்ட், கேஸ் என அலைய வைப்பது) நீங்க வழிவகை செய்வது

சுருக்கமாக,

1. குற்றம் செய்யத் தூண்டும் மனநிலையை மாற்றுவது (குற்றவாளி)
2. தற்காத்துக் கொள்ளும் ஆளுமையை வளர்ப்பது (பாதிக்கப்படுபவர்)
3. உதவி செய்யும், போராடும் குணம் உருவாக்குவது (சமுதாயம்)

ஏனெனில் சமுதாயம் என்பது நான் சார்ந்த , என் குடும்பத்தையும் உள்ளடக்கியது தானே? நாளை இதே சூழ்நிலையில் நானோ, என் குடும்பமோ நிற்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

கையாலாகாத என் சமூகமே! ஸ்வாதியும் உன் ரத்தமே... உன் சகோதரியே ... என்ன செய்யப் போகிறாய் , உன் சகோதரியின் கொடூரக் கொலைக்கு?

என் குருமூர்த்தி

பொதுவாகவே கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்தால் அதை பார்ப்பவர்களுக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் தங்களுக்கும் ஏதாவது நடந்து விடுமோ தங்களின் உயிருக்கு குடும்பத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் இருப்பது இயல்பு. ஆனால் பேருந்து நிலையம் ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் இது போன்று நடக்கும் போது கொலை செய்ய இல்லை தாக்குதல் நடத்தும் நபர் ஒரே ஒரு நபராக இருந்தால் அங்கே கூடி இருக்கும் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சித்தால் உயிரிழப்பை தடுக்க முடியும்.

ஒரு வேளை அப்படி தடுக்க முடியாவிட்டாலும் காயம்பட்ட, தாக்குதலுக்கு ஆளான நபருக்கு உடனடியாக முதலுதவிகளை செய்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, நம்மால் கொண்டு செல்ல முடியாவிட்டாலும் 108 ஆம்புலன்ஸுக்கு அல்லது காவல் துறைக்கு உடனடியாக தகவலை தர முயற்சிக்கலாம். இது கூட செய்ய தயங்குவதற்கு காரணம், நாம் உதவி என்று செய்ய போனால் நம்மை காவல் துறை சாட்சியாக்கி மாத கணக்கில் அலைய விடுவார்களோ என்ற பயம் இருக்கும்.

,இது போன்ற சமயங்களில் உதவி செய்பவர்களை தேவை இல்லமால் அலைய விடமாட்டோம் அவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு தருவோம் என்ற உறுதி மொழியை காவல் துறை தந்தால் மட்டுமே உடனடியாக உயிரையும் காக்கமுடியும். குற்றவாளிகளையும் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

தற்போது அனைத்து இடங்களிலும் CCTV கேமரா காவல் துறை சார்பிலும் தனிப்பட்டவர்கள் கூட தங்கள் இல்லங்களில் கடைகளில் பொருத்தி இருக்கின்றார்கள் உண்மையாகவே இந்த கேமரா பொருத்துவதன் நோக்கம் அதை காவல் துறையினர் 24 மணிநேரமும் பார்த்து கொண்டே இருந்தால் சந்தேகப்படும் வகையில் ஏதுவாது தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரும் இது போன்ற தாக்குதல்களை தடுக்கலாம். ஆனால் நாம் இந்த CCTV யை எல்லாம் முடிந்த பின்னர் குற்றவாளி தப்பித்த பின்னர் அடையாளம் காண மட்டுமே பயன்படுத்துகிறோம்.

இனியாவது அந்தந்த பகுதியில் உள்ள CCTV கேமிராவை ஒருங்கிணைத்து 24 மணிநேரமும் அதை பார்க்கும் பணியில் ஆட்களை நியமிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். காவல் துறை என்பது அரசிற்கு வருமானம் ஈட்டும் துறை அல்ல, ஆனால் மாநிலத்தின் அமைதியை குற்றச்செயல்களை தடுக்கின்ற ஒரு துறை என்பதால் அரசாங்கம் காவல் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக ஆட்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பேருந்து நிலையம் ரயில் நிலையம் போன்ற போது மக்கள் வந்து போகும் இடங்களில் குறைந்தது 2 காவலர்களையாவது பணியில் அமர்த்த வேண்டும். 7 கோடி மக்கள் இருக்கும் தமிழ் நாட்டிற்கு எத்தனை காவலர்கள் வேண்டும். எதுவுமே நடக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் ஏதாவது நடக்கும் போது அதை உடனடியாக தடுக்கும் அளவிற்கு காவல் துறையில் ஆட்கள் வேண்டும் என்பதை அரசாங்கம் உணரவேண்டும்.

கவிஞர் கவி சதீஷ்

ஸ்வாதி கொலையானதற்கு முதலில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நடந்ததை நினைக்கும் போது, அனைவருக்குமே பாதுகாப்பற்ற நிலையே சென்னையில் உள்ளது என்று எண்ண தோன்றுகிறது.

இதில் அரசின் அலட்சியம் தெள்ள தெளிவாக தெரிகிறது. அதே சமயம் சிலர் இதை நேரில் பார்த்தும் ஒன்றும் செய்யாதது, தலைகுனிவாக உள்ளது. இங்கு மட்டும் தான் பட்டப்பகலில் நம் கண் முன்னே எது நடந்தாலும் கண்டுக்காமல் செல்வது அதிகம் நடக்கிறது. இதில் போலீசாரின் கெடுபிடிகளும் மக்களை அவ்வாறு நடக்க செய்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அந்நிலை மாற வேண்டும்.

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போது ஒன்று பட்டத்தை போல், இனி வரும் ஒவ்வொரு நாளும் இது போன்ற நிகழ்வுகளை களைய துணிந்து நிற்க வேண்டும்.. முடிந்தவரை இரு அரசுகளும் பாரபட்சம் பார்க்காமல் உடனே அனைத்து பொது இடங்களிலும் கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மீடியாக்களும், இதர கட்சிகளும் இரு அரசையும் குற்றம் சொல்வதை தவிர்த்து, நல்ல ஆலோசனைகளை கூற முயல வேண்டும். தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டிக்க படவேண்டும்.

இந்த கொலையின் போது யாராவது புகைப்படம் விடீயோ எடுத்திருந்தால் கொடுக்குமாறு ஸ்வாதியின் உறவினர் கேட்டது வலியின் உச்சம்.

ஹரிஹரன், வடவள்ளி, கோவை

செல்வி. சுவாதி படுகொலைக்கு முதலில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சம்பவம் நடந்த இடத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக சுவாதியை என் உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றி இருப்பேன். குறைந்த பட்சம் குற்றவாளி யையாவது பிடித்து காவல் துறையினர் வசம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருப்பேன். ஆண் பிள்ளைகளின் பெற்றோர்கள் அவரவர் மகன்களை தொடர்ந்து கவனித்து. ..பாசமுள்ள உறவினை பபராமரிக்க வேண்டும். பெண்ணை மட்டுமே ஜாக்கிரதையாக இரு என்று சொல்லி பயனில்லை. தொலைக்காட்சி மெகா சீரியல் நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக சென்சார் தேவை. ஏனென்றால் அவற்றில் வன்முறை சம்பவங்கள் குறித்து துல்லியமாக திட்டம் வகுத்து தரப்படுகிறது. ஆண். .பெண் உறவு. ...காதல் பற்றி ஒரு பாடப் பிரிவினை பிளஸ் ஒன் வகுப்பில் உடன் துவக்குவது மிகவும் அவசியம். சட்டம் ரீதியாக நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை அமுலாக்கப் பட வேண்டும்.

கணேஷ் ஷண்முக நடராஜன், புளியங்குடி

சம்பவ இடத்தில் ஒரு வேளை நான் இருந்திருந்தால் சற்றே அதிர்ச்சியாக தான் இருந்துருப்பேன். ஆனால் கைகட்டி எனக்கு ஏதும் நடக்கவில்லை, நமக்கு எதுக்கு வம்பு என அங்கிருந்து ஓடியவர்கள் போல் நான் ஓடியிருக்க மாட்டேன். அதற்காக சினிமா கதாநாயகன் போல் சண்டையும் போட்டிருக்க மாட்டேன்... ஆனால் முடிந்தளவு மர்ம நபரை பின் தொடர்ந்து துப்பு கொடுத்திருப்பேன். அவனை விரட்டி பிடிக்க கூச்சலிட்டபடியே ஓடி துரத்தியிருப்பேன். அதன்மூலம் யாராவது ஒருத்தர் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

தனிப்பட்ட என் உணர்வுகளில் என்னால இந்த விஷயத்தை ஜீரணிக்கவே முடியல... என் தங்கைக்கு அல்லது வீட்ல நடந்த நிகழ்வு மாதிரி இருக்கு... கோபம் அவ்ளோ வருது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+