கையில் துப்பாக்கியோடு அருள் பாலிக்கும் பிரபாகரன் சாமி!
வேளாங்கண்ணி: கையில் அரிவாளுடன் காவல் தெய்வம் கருப்பசாமிக்கு கோயில் கட்டி பார்த்திருப்போம். நாகை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு கோவில் கட்டியுள்ளார் திமுக நிர்வாகி ஒருவர்.
இந்த கோவில்தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணி அருகே உள்ளது தெற்கு பொய்கை நல்லூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். தி.மு.க. நிர்வாகியான இவர், தனது கிராமத்தில் பெரியாச்சி அம்மன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.

இந்த கோயிலில் இடது மற்றும் வலதுப் பக்கத்தில் இரண்டு குதிரைகளை வைத்துள்ளார். இந்த குதிரைகளுக்கு அருகில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முழு உருவ சிலையை வைத்துள்ளார் மாணிக்கம். கையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் கம்பீரமாக நிற்கிறார் பிரபாகரன்.
இந்த கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தியுள்ளார் மாணிக்கம். ஏராளமானோர் வந்து வழிபட்டனர்.
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆதரவாளர்களும், ரசிகர்களும் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் திமுக நிர்வாகி ஒருவர் கோயில் கட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications