Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக சட்டசபை தேர்தல்: ஏப்ரல் 9-ம் தேதி ஆர்.கே.நகரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வரும் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தனது சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை தாம் போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

tn cm jayalalithaa will starts election campaign from April 9 on chennai

இந்நிலையில், நேற்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பங்கேற்கவிருக்கும் தேர்தல் பிரச்சார தேதியின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆர்.கே., நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கும் அவர், மே மாதம் 12ம் தேதி வரை அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதற் கட்டமாக பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம் பற்றிய விபரத்தை அ.தி.மு.க., மேலிடம் வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா தேர்தல் பிரசார தேதிகள் முழுவிவரம்:

ஏப்ரல் 9: சென்னை, ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர் (தனி), ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர்

ஏபர்ல் 11: விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் (தனி), பெரம்பலூர் (தனி), குன்னம், அரியலூர்,ஜெயங்கொண்டம், திட்டக்குடி (தனி)

ஏப்ரல் 13: தருமபுரி (பொதுக் கூட்டம்), பாலக்கோடு, பென்னாகரம், பர்கூர், கிருஷ்ணகிரி, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, ஒசூர், அரூர் (தனி), ஊத்தங்கரை (தனி), வேப்பனஹள்ளி, தளி,

ஏப்ரல் 15: அருப்புக்கோட்டை (பொதுக் கூட்டம்), ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர், திருச்சுழி, விருதுநகர், சிவகங்கை, மானாமதுரை (தனி), பரமக்குடி (தனி), ராமநாதபுரம்,முதுகுளத்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி

ஏப்ரல் 18: காஞ்சிபுரம் (பொதுக் கூட்டம்), தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, அம்பத்தூர், செய்யார், வந்தவாசி (தனி),

ஏப்ரல் 20: சேலம் (பொதுக் கூட்டம் ) மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, கங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு,

ஏப்ரல் 23: திருச்சி மேற்கு (பொதுக் கூட்டம்), திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், கந்தர்வ கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, முசிறி, துறையூர்
(தனி), அரவக்குறிச்சி,

ஏப்ரல் 27: மதுரை (பொதுக் கூட்டம்) கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, மேலூர், சோழவந்தான் (தனி), திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம்,(தனி), போடி நாயக்கனூர், கம்பம், பழனி,ஒட்டன் சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர், காரைக்குடி, திரப்பத்தூர், திருவாடனை,

மே 1: கோயம்புத்தூர் (பொதுக் கூட்டம்) வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், தொண்டாமுத்தூர்,கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), பல்லடம், உடுமலைபேட்டை, மடத்துக்குளம், உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர்,

மே 3: விழுப்புரம் ( பொதுக் கூட்டம்), செஞ்சி, மைலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளூந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்,

மே 5: பெருந்துறை (பொதுக் கூட்டம்), பவானி, அந்தியூர், கோபி செட்டிப்பாளையம், பவானிசாகர் (தனி), ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, அவினாசி (தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), காங்கேயம், குமாரபாளையம்,

மே 8: தஞ்சாவூர் (பொதுக் கூட்டம்), திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், நாகபட்டினம், கீழ்வேலூர் (தனி), வேதாரண்யம், திருத்துறைபூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம்,

மே 10: நெல்லை (பொதுக் கூட்டம்), பாளையங்கோட்டை, சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர்,

மே 12: வேலூர் (பொதுக் கூட்டம்), அணைக்கட்டு, குடியாத்தம் (தனி),வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கீழ் வைத்தியநாதன் குப்பம் (தனி), போளூர், ஆரணி, செங்கம் (தனி), கலசபாக்கம், இதையடுத்து அன்றே தனது பிரசாரத்தை முடிக்கிறார் ஜெயலலிதா.

புதுச்சேரி மாநிலம்:

ஏப்ரல் 25: புதுச்சேரி (பொதுக் கூட்டம்), மண்ணாடிப்பட்டு, திருபுவனை (தனி), ஊசுடு (தனி), மங்களம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா

நகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன் பேட்டை,

நெல்லித்தோப்பு,முதலியார் பேட்டை, அரியாகுப்பம், மணவெளி, ஏம்பலம்( தனி), நெட்டப்பாக்கம் (தனி), பாகூர், நெடுங்காடு (தனி), திருநள்ளார்,

காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி- திருப்பட்டினம், மாஹே, ஏனம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+