தமிழ்நாட்டின் ஆறுபடை வீடு அறக்கட்டளை, மலேசிய நாட்டுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம் - வைகோ
தமிழ்நாட்டின் ஆறுபடை வீடு அறக்கட்டளை, மலேசிய நாட்டுக்குள் தேவை இன்றி மூக்கை நுழைக்க வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: தமிழர்களுடைய பலவீனமே ஒற்றுமை இன்மைதான் என்பதற்கு இணங்க, ஒரு சிறு குழுவினர் இந்தத் தங்கரத ஊர்வலத்துக்கு இடையூறு செய்யும் நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடு அறக்கட்டளை என்ற அமைப்பை அணுகியுள்ளனர் என்று வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில், தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் கடந்த 230 ஆண்டுகளாக பினாங்கு தமிழ் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றது. தமிழர்கள் வழிபடும் முருகக் கடவுளை அறக்கட்டளை பராமரித்து வருகின்றது. ஆலயக் குழுத் தலைவராக பினாங்கு மாநிலத் துணை முதல் அமைச்சரும், ஈழத் தமிழர்களின் காவல் அரணுமான பேராசிரியர் இராமசாமி சிறப்பாகத் தொண்டு ஆற்றி வருகின்றார். தங்க ரதம் அமைத்து, தமிழர்கள் வாழும் பகுதியில் சுற்றிவர ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழர்களுடைய பலவீனமே ஒற்றுமை இன்மைதான் என்பதற்கு இணங்க, ஒரு சிறு குழுவினர் இந்தத் தங்கரத ஊர்வலத்துக்கு இடையூறு செய்யும் நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள 'ஆறுபடை வீடு அறக்கட்டளை' என்ற அமைப்பை அனுகியுள்ளனர். அதன் செயலாளர் அலமேலு அருணாச்சலம், தங்க ரதம் கோயில் சுற்றுப் பிரகாரத்தில் மட்டும்தான் சுற்றி வர வேண்டும் என்று தந்துள்ள அறிக்கை தவறு.
இலங்கைத் தீவில், தமிழ் ஈழத்தில் நூற்றுக்கணக்கான முருகன் கோயில்கள் சிங்களர்களால் உடைத்து நொறுக்கப்பட்டபோது, இந்த ஆறுபடை வீடு அறக்கட்டளை எங்கே போனது? அதை எதிர்த்துக் குரல் கொடுத்ததா? அல்லது இன்றுவரை அதைப் பற்றி வாய்திறந்து பேசி இருக்கின்றார்களா? ஆலய ஆகம விதிகளை வகுப்பதற்கு இந்த அமைப்பு அதிகாரம் பெற்று இருக்கின்றதா? மக்களுக்காகத்தான் ஆலயம். மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தங்க ரதம் சுற்றி வருவதில் தவறு எதுவும் இல்லை.
மலேசிய நாட்டில் பினாங்கு மாநிலத்தில் தண்ணீர்மலை முருகன் கோயில் குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரமும் அந்த ஆலயக்குழு நிர்வாகத்திற்கும், திருப்பணிக் குழுத் தலைவர் துணை முதல்வர் பேராசியர் இராமசாமி மட்டுமே உண்டு. எனவே தமிழ்நாட்டின் ஆறுபடை வீடு அறக்கட்டளை, மலேசிய நாட்டுக்குள் தேவை இன்றி மூக்கை நுழைக்க வேண்டாம் என்று வைகோ கூறியுள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications