ஒரு நாய்க்குட்டிக்காக சாந்தி தீக்குளித்தது சரியா?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தான் ஆசையாக வளர்த்து வந்த நாய்க்குட்டியை தூக்கி தனது கணவர் வெளியில் விட்டு விட்டு வந்ததால் ஆத்திரமடைந்த மனைவி தீக்குளித்து விட்டார். தற்போது சீரியஸாக இருக்கிறது அவரது உடல் நிலை.
சுல்தான்பேட்டை கைக்கோளர் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சாந்தி (40). சாந்திக்கு நாய் என்றால் கொள்ளைப் பிரியமாம். கடந்த இரண்டு மாதங்களாக நாய்க்குட்டி ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். ஆனால் பெருமாளுக்கு இது பிடிக்கவில்லை. அதைக் கொண்டு போய் விட்டு விட்டு என்று கூறி வந்தார். ஆனால் சாந்தி கேட்கவில்லை. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று நாயைக் கொண்டு போய் எங்கேயோ விட்டு விட்டு வந்து விட்டார் பெருமாள். அவ்வளவுதான் ஆத்திரமடைந்தார் சாந்தி. வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி தீவைத்துக் கொண்டார். அலறித் துடித்த அவரது குரலைக் கேட்டு கணவர் பெருமாள், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications