ஜாக்பாட் அடிக்கும் கன்னி ராசி.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு.. ஆவணி மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்

  • ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    Advertisement

    இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், கன்னி ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு விலை உயர்ந்த பொருள்களை கையாளக்கூடிய கன்னி ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழுத்து, சுழுக்கு, தோள்பட்டை போன்ற பகுதிகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நியாபக மறதியால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு ஏற்படும். துணை ஒன்று சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

    Advertisement

    முன்னேற்றம்

    பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றங்கள் உண்டாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சுப விரயங்கள் ஏற்படும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது, ஆடைகள், ஆபரணங்கள் வாங்குவது போன்ற யோகங்கள் ஏற்படும்.

    மாற்றம், முன்னேற்றம்

    தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து வித நல்ல மாற்றங்களும் உண்டாகும். மேலதிகாரிகளின் முழு நம்பிக்கையைப் பெறுவீர்கள். வேலை, தொழில் என்றே இருக்காமல் உங்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்குவது நன்மையைத் தரும். ஞாயிற்றுக்கிழமை தோறும் மதிய வேளைகளில் ஏழைகளுக்கு உணவு தானமாகக் கொடுப்பது விரயத்தில் இருந்து பாதுகாக்கும்

    Advertisement

    வழிபாடு

    விவாகரத்து வரை சென்றவர்கள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு ஏற்படும். விஷ்ணு வழிபாடு, விஷ்ணு காயத்ரி ஏற்றத்தைத் தரும். ஏற்றமும், நம்பிக்கையும், அனுகூலம் ஏற்படும் மாதமாக இந்த ஆவணி மாதம் அமையும். உடற்பயிற்சி, ஸ்டிரெட்சிங் போன்றவற்றை செய்வது நல்லது. உடல் ரீதியாக, மன ரீதியாக கவனமாக இருக்க வேண்டும்.

    English Summary

    Aavani Month Rasi Palan: Kanni rasi people may see positive changes in career, finances, relationships and new opportunities during this month.