புரட்டாசி மாத பலன்: தனுசு ராசி தொட்டதெல்லாம் ஹிட்டு.. அட்டகாசமான பணவரவு

  • Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் பிறந்துவுள்ளது. கன்னி ராசிக்குள் வரும் சூரியனால் புரட்டாசி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

    Advertisement

    கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது. அந்த வகையில், இந்த புரட்டாசி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    தனுசு ராசி

    தனுசு ராசியினருக்கு இந்த புரட்டாசி மாதத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட பயணங்கள் ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். துணைக்கு அற்புதமா அமைப்பு உண்டாகும். நல்ல வாழ்க்கை அமைப்பு ஏற்படும். கெளரவம் உண்டாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும்.

    குட்நியூஸ்

    தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக சந்தோஷமும், முன்னேற்றமும் ஏற்படும். பிள்ளைகளின் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    மாற்றம், முன்னேற்றம்

    பிள்ளைகளுக்கு தடைப்பட்டிருந்த விஷயங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கி, பணவரவு ஏற்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த கஷ்டங்கள், சிக்கல்கள் நீங்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். உறவுகளுக்குள் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். புதிய தொழில் மாற்றம், கூட்டாளிகள் மாற்றம் ஏற்படும். படிப்பு மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். நீங்கள் படிக்க விரும்பிய துறைகள் உங்களுக்கு கிடைக்கும்.

    பணவரவு

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தடைகள் விலகக்கூடிய நல்ல காலகட்டம். தொழில், வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பயணங்களால் ஆதாயம் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம்.

    Advertisement

    வழிபாடு

    குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். புதன்கிழமை விநாயகர், பெருமாள் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

    English Summary

    Purattasi matha palan: Purattasi Month 2026 brings Dhanusu Rasi natives promising career growth, financial gains, respect, new responsibilities and support.