Rasi palan this week: மேஷ ராசியினரே வீடு, சொத்து வாங்கும் யோகம்.. இந்த வாரம் எப்படி?

  • Rasi palan this week: செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம் ராசி பலன்

    மேஷம் ராசியினருக்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இருப்பினும் அதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏற்கனவே இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு புதிய வேலைகளை எடுப்பது நல்லது. தூக்கத்தை தவிர்க்கக் கூடாது. பண வரவு நன்றாக இருக்கும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் ஏற்றமும், அனுகூலமும் காணப்படும்.

    பயணங்கள்

    இழுபறியான விஷயங்களை விட்டுவிடாமல் அதனை செய்து முடிப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு நிமித்தமாக எந்த பயணங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்ளலாம். மேஷ ராசி கணவர்கள் மனைவியிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. மேஷ ராசி மனைவி கணவரை நன்றாகப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

    Advertisement

    ஆரோக்கியம்

    கழுத்துப் பகுதி, தூக்கமின்மையால் பிரச்சனை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உங்களை நம்பி நிறைய பொறுப்புகள் வந்து சேரும். சனி 10க்கும், 11க்கும் உரியவர் என்பதால் நிறைய வேலைகள் கிடைக்கும். வயதானவர்களுக்கு ஏராளமான வெற்றிகள் ஏற்படும். குடும்பத்தினருடன் சேர்ந்து சுற்றுலா செல்வீர்கள். நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் அமைப்பு உள்ளது.

    வீடு, சொத்து யோகம்

    நிறைய பரிசுப் பொருள்கள் வந்து சேரும். சந்தோஷத்திற்கு எந்தவித குறைவும் இருக்காது. வீடு, சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். 30 ஆம் தேதி மதியம் வரை அற்புதமாக இருக்கும். பின்னர், சிறிய சிறிய ஆரோக்கியக் குறைபாடுகள் வந்தாலும், வாரத்தின் இறுதியில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய அமைப்பு உள்ளது.

    Advertisement

    வழிபாடு

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Mesham (Aries) sign during the period from September 28 to october 4 (Purattasi 11 to 17).