இந்திய விமானப்படையில் பணியாற்ற ஆசையா? அக்னிவீர் வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. 40,000 சம்பளம்!

  • சென்னை: அக்னிவீரர் வாயு திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

    Advertisement

    இந்திய விமானப்படையில் அக்னிவீரர் வாயு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலான இந்த வேலை வாய்ப்பு திட்டத்தில் மெட்ரிகுலேஷன் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

    Advertisement

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு (Non-Combatant) பணியிடங்களுக்கு இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்வு முறைகள் சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

    கல்வித் தகுதி:

    மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உடல் தகுதியை பொறுத்தவரை குறைந்தபட்சம் 152 செ.மீ இருக்க வேண்டும். மார்பு குறைந்தபட்ச விரிவு அளவு 5 செ.மீ. ஆக இருத்தல் அவசியம். நல்ல பார்வைத்திறன் மற்றும் கேட்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருத்தல் அவசியம்.

    Advertisement

    பணிகள் என்ன?

    தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சமையல், சமையலறை நிர்வாகம், உணவு பரிமாறுதல், சமையலறையை சுகாதாரமாக பராமரித்தல், உணவு மற்றும் பிற பொருட்களை சேமித்து வைத்தல், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை கையாளுதல், ஃப்ரிட்ஜ் உள்ளிட்டவற்றை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டியிருக்கும். படைப்பிரிவை சாராத (non combatant) உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே அக்னி வீரர் வாயு திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள்.

    பணியிடங்கள்:

    தாம்பரம், கோவை, தஞ்சாவூர், ஆவடி, பெங்களூர், திருவனந்தபுரம், டெல்லி, மும்பை, தானே, ஜெய்பூர், மைசூர் உள்பட நாடு முழுவதும் உள்ள 134 இந்திய விமானப்படை அலுவலகங்களில் காலியிடங்கள் உள்ளன.

    Advertisement

    சம்பளம் எவ்வளவு?

    அக்னி வீரர் வாயு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ஆண்டு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.. 4 ஆண்டுகள் முடிவில் சேவா நிதியாக ரூ.10.4 லட்சம் கிடைக்கும்.

    தேர்வு முறை:

    எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப பதிவு முடியும் நாள்; 17.08.2026 ஆகும்.

    தேர்வு அறிவிப்பினை படிக்க: https://iafrecruitment.edcil.co.in/agniveervayu/pdffiles/Latest%20Information%20Brochure_Agv%20NC_01%20of%202027.pdf

    English Summary

    Agniveer Job Recruitment: A recruitment notification has been released for 'Agniveer Vayu' positions under the Agniveer Vayu scheme. Youth who have completed the 10th standard are eligible to apply for these posts. Selected candidates will receive a monthly salary of ₹40,000. Details regarding this recruitment can be found here.