டெக்னாலஜி உலகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட நிறுவனங்கள் தான் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிறுவனத்தில் வேலை வாங்குவது உலகெங்கிலும் உள்ள சாப்ட்வேர் இன்ஜினியர்களின் லட்சியமாக இருக்கும் அளவுக்கு இந்த நிறுவனங்கள் அதிக்கம் செலுத்தி வந்தன.
பேஸ்புக், அமேசான், ஆப்பிள், நெட்பிளிக்ஸ் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பை 'ஃபேங்' (FAANG) என்று அழைக்கப்பட்டது. புதுமையான கண்டுபிடிப்புகள், கற்பனைக்கு எட்டாத சம்பளம், இந்த நிறுவனத்தில் வேலை வாங்கினால் சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்து என இந்த 5 நிறுவனங்களும் ஒட்டுமொத்த தொழில்நுட்பச் சந்தையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
ஆனால், நாம் இப்போது 2026 ஆம் ஆண்டில் இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், டெக் உலகில் எந்த நிறுவனங்கள் இனி உலகை ஆளப்போகின்றன என்ற அதிகார மையத்தையும் அடியோடு மாற்றி அமைத்துள்ளது.
இதன் விளைவாக, ஃபேங் நிறுவனங்களின் ஆதிக்கம் சரிந்து, தற்போது 'மாங்கா' (MANGOES) என்ற புதிய ஆதிக்க கூட்டணி உலக அரங்கில் உருவெடுத்துள்ளது.
மாங்கா (MANGOES) நிறுவனங்கள்?
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தான் தற்போது டெக்னாலஜி துறையின் அதிகார மையமாக மாறியுள்ள சூழலில், அடுத்த தலைமுறையை ஆளப்போகும் இந்த 'மாங்கா' (MANGOES) கூட்டமைப்பில் உள்ள நிறுவனங்கள் எது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
Advertisement இந்த கூட்டணியில் மெட்டா (Meta), ஆந்த்ரோபிக் (Anthropic), என்விடியா (Nvidia), கூகுள் (Google), ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) ஆகிய 6 மெகா நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏஐ உலகின் புதிய பவர்ஹவுஸ்!
சாப்ட்வேர் இன்ஜினியர்கள், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக வல்லுநர்கள் மத்தியில் ஏஐ புரட்சியை வழிநடத்தும் இந்த மாங்கா நிறுவனங்கள் மீது தான் முழு கவனமும் உள்ளது. இந்த நிறுவனங்கள் தான் அடுத்த தலைமுறை வளர்ச்சியை உருவாக்கப்போகிறது.
ஆனால், நாம் இப்போது 2026 ஆம் ஆண்டில் இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், டெக் உலகில் எந்த நிறுவனங்கள் இனி உலகை ஆளப்போகின்றன என்ற அதிகார மையத்தையும் அடியோடு மாற்றி அமைத்துள்ளது.
இதன் விளைவாக, ஃபேங் நிறுவனங்களின் ஆதிக்கம் சரிந்து, தற்போது 'மாங்கா' (MANGOES) என்ற புதிய ஆதிக்க கூட்டணி உலக அரங்கில் உருவெடுத்துள்ளது.
மாங்கா (MANGOES) நிறுவனங்கள்?
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தான் தற்போது டெக்னாலஜி துறையின் அதிகார மையமாக மாறியுள்ள சூழலில், அடுத்த தலைமுறையை ஆளப்போகும் இந்த 'மாங்கா' (MANGOES) கூட்டமைப்பில் உள்ள நிறுவனங்கள் எது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
இந்த கூட்டணியில் மெட்டா (Meta), ஆந்த்ரோபிக் (Anthropic), என்விடியா (Nvidia), கூகுள் (Google), ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) ஆகிய 6 மெகா நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.