தங்கம் விலை எவ்வளவு குறையும்! எப்போது வரை குறையும்! மிக தெளிவாக ஆனந்த் சீனிவாசன் சொன்ன பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம் இறக்கம் என மாறி மாறி இருக்கிறது. தங்கம் விலை இதுபோல குழம்பி அடிக்க என்ன காரணம்.. இதற்கு மேல் தங்கம் விலை குறையுமா.. அப்படியே குறைந்தால் எவ்வளவு காலம் குறையும்.. அதிகரிக்க எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்தே வந்தது. கடந்த மே 10ம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.72360ஆக இருந்தது. ஆனால், அதன் பிறகு சீராகத் தங்கம் விலை குறைந்தே வந்தது. கடந்த மே 15ம் தேதி குறைந்தபட்சமாக ரூ.68,880 வரை போனது.

Anand Srinivasan gold personal finance

தங்கம் விலை

இருப்பினும் நேற்றைய தினம் தங்கம் விலை உயர்ந்தது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், அது உயர என்ன காரணம்.. இனிமேல் தங்கம் விலை தொடர்ந்து உயர மட்டுமே செய்யுமா எனப் பல கேள்விகள் வந்துள்ளது.

ஆனந்த் சீனிவாசன்

இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் மேலும் கூறுகையில், "தங்கம் விலை நேற்று திடீரென உயரத் தொடங்கியது. அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3200 டாலரை தாண்டிவிட்டது. இந்தியாவிலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8700ஐ தாண்டிவிட்டது. இப்போதைக்குத் தங்கம் விலை அதன் குறைந்தபட்ச மதிப்பைத் தொட்டுவிட்டது என்றே நினைக்கிறேன். இங்கிருந்து அது அதிகரிக்கும்.

இனி உயரும்

தங்கம் விலை அதிகரிக்குமா என நீங்கள் கேட்டால்.. நிச்சயம் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறேன். சரி, ஏன் அதிகரிக்கும் எனக் கேட்டால்.. அமெரிக்காவில் ஏற்கனவே வரி விகிதம் அதிகமாக இருக்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பும் அதிகமாக இருக்கிறது. அங்கு வரிகளைக் குறைக்கக் குறைக்க டாலர் அழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் தங்கம் விலை உயரும்.

இப்போது உலக நாடுகளின் மத்திய வங்கிகளே அதிகபட்சம் தங்கத்தை வாங்குகிறார்கள். அவர்கள் தங்கம் விலை ரொம்ப சரிய விட மாட்டார்கள். மார்கெட்டை பிடித்து வைக்கவே முயல்வார்கள். தங்கம் விலையை அடுத்த லெவலுக்கு தள்ள முயன்று கொண்டே இருப்பார்கள். எனவே, தங்கம் வாங்குவதால் யாருக்கும் எந்தவொரு நஷ்டமும் வந்துவிடாது. சொல்லப்போனால் பல லாபங்களே இருக்கிறது" என்றார்.

வரும் காலம்

அதேபோல அவர் மேலும் கூறுகையில், "தங்கம் விலை குறைந்தால் அதை வாங்கிக்கொண்டே செல்லாம். இப்போதைக்கு அமெரிக்கா சீனா வர்த்தகத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் தங்கம் விலை குறைகிறது. அதேநேரம் அமெரிக்காவில் பணவீக்கம் வர வாய்ப்பு இருக்கிறது. ஒட்டுமொத்தமாகச் சொன்னால் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வர வாய்ப்பு இருக்கிறது.

முக்கிய டிப்ஸ்

இந்த காலாண்டில் மிஸ்ஸானாலும் கூட டிசம்பர் மாதம் பொருளாதார மந்தநிலை வர வாய்ப்புகள் மிக அதிகம். அந்தச் சமயம் தான் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியைக் குறைக்கும்.. அப்போது தங்கம் விலை அதிகரிக்கும். தங்கத்தில் இதுதான் நீண்ட கால ஆட்டமாக இருக்கும். தற்போது போர் சூழல் காரணமாகத் தற்காலிகமாகத் தங்கம் விலை உச்சம் தொட்டுக் குறைந்துள்ளது. இப்போது குறைந்துள்ளதால் தங்கம் தேவைப்படுவார் வாங்கலாம்" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+