அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ! தவெகவில் தற்காலிக சபாநாயகர்! யார் இந்த சோழவந்தான் கருப்பையா?
சென்னை: தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்ற கருப்பையா யார் என்பதை பார்க்கலாம். இவர் சோழவந்தான் தவெக எம்எல்ஏவாக இருக்கிறார். நாளை காலை 233 தொகுதிகளின் எம்எல்ஏக்களுக்கும் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்கு காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக பெற்றது.

இதையடுத்து தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் பதவியேற்றார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், ராஜ்மோகன், நிர்மல்குமார், வெங்கட்ரமணன், பிரபு, கீர்த்தனா ஆகிய ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றனர்.
ஆளுநர் அர்லேக்கருடன் குழுப்படம் எடுத்த பிறகு, விஜய் முக்கிய கோப்புகளில் மக்கள் முன்னிலையிலேயே கையெழுத்திட்டது பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் விஜய், 500 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். எனினும், தமிழக அரசு உடனடியாக வெளியிட்ட அரசாணையில், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கெனவே உள்ள 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடரும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2.30 கோடிக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த மின்சாரத் திட்டத்தால் அரசுக்கு கூடுதலாக ₹1730 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மின்சாரத் துறை தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் முதலமைச்சருடன் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார். மேலும், பெண்கள் பாதுகாப்பிற்கான "சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்", போதைப்பொருள் ஒழிப்புக்கான "வேலுநாச்சியார் படை" உருவாக்கம் ஆகிய முக்கிய கோப்புகளிலும் விஜய் கையெழுத்திட்டார்.
இதையடுத்து தலைமைச் செயலகத்திற்கு சென்ற விஜய், அங்கு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். பிறகு தற்காலிக சபாநாயகராக கருப்பையா என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் தமிழக ஆளுநர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார். இவர் யார் என்பதை பார்க்கலாம். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூரைச் சேர்ந்தவர் கருப்பையா. 1980-ம் ஆண்டிலிருந்து அதிமுக உறுப்பினராக இருக்கிறார். மீனவரணி ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக சார்பில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அதன் பிறகு 2016, 2021 ஆகிய 2 முறையும் அவருக்கு அதிமுகவில் சீட் கொடுக்கப்படவில்லை. ஆகவே 2026 தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
https://tamil.oneindia.com/news/chennai/who-is-karuppaiah-chozhavandhan-tvk-mla-appointed-as-tamil-nadu-s-pro-tem-speaker-798421.htmlஅதனால் கடந்த மார்ச் மாதம் செங்கோட்டையனை சந்தித்து தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு சோழவந்தான் (தனி) தொகுதியில் போட்டியிட விஜய் வாய்ப்புக் கொடுத்தார்.
அதன்படி சோழவந்தான் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவருக்கு தற்போது தற்காலிக சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட்டு பதவிப்பிரமாணமும் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் பதவியேற்பு விழாவை போல் ஆளுநர் மாளிகையில் நடந்த தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்ற போது வந்தே மாதரம், தேசிய கீதம் பிறகு கடைசியாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications