சுக்கிரன் உக்கிரமா இருந்தா தங்கம் விலை ரூ.8200க்கு போகும்! நறுக்குனு போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் தங்கம் விலை எப்போது தான் குறையும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓரிரு வாரமாக நிலையாக இருந்த தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200க்கு மேல் உயர்ந்துவிட்டது. நேற்றைய தினம் தான் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்தது.

Anand Srinivasan gold personal finance

தங்கம் விலை

நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை கிராம் ரூ 9,130-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ 73,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே தங்கம் விலை திடீரென கணிசமாகக் குறைய வாய்ப்பு இருப்பதாக சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கணிப்புகளைச் செய்துள்ளன. இதனால் தங்கம் விலை எப்படி இருக்குமோ என்பதில் மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள அவர், வரும் காலங்களில் அது எப்படி இருக்கும் என்பது குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை இப்போதே ரூ.10,000ஐ நெருங்கிவிட்டது. அதிலும் மேக்கிங் சார்ஜ் எல்லாம் சேர்த்தால் இப்போதே ரூ.10,000ஐ தாண்டிவிட்டது. எனவே, தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கு. தங்கம் இதற்கு மேல் உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.

எல்லா சிக்னல்களும் தங்கம் விலையை பாசிட்டிவாகவே காட்டுகிறது. ஒரு பக்கம் ஐரோப்பாவில் பணவீக்கம் குறைந்துள்ளதால் அங்கு வட்டி விகிதம் சீக்கிரம் குறைக்கப்பட உள்ளது. இந்தியாவிலும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் தங்கத்திற்குச் சாதகமான விஷயங்கள். அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை இன்னும் எகிறும்.

உயரவே வாய்ப்பு அதிகம்

தங்கம் விலை எகிறவே வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த ரேட்டில் இருந்து தங்கம் விலை அடுத்த 24 மாதங்களில் 15% வரை உயர வாய்ப்பு இருக்கிறது. அதாவது இப்போது ஆபரணத் தங்கம் விலை ரூ.9000 ரேஞ்சில் இருக்கிறது அல்லவா... அதிலிருந்து 15% உயரும். 24 கேரட் தங்கம் இப்போது ரூ.10,000ஐக்கு விற்கப்படும் நிலையில், அதிலிருந்து 15% உயரும். இதற்கா வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இந்தச் சூழலில் பிரபல மியூச்சுவல் பண்ட் நிறுவனம் ஒன்று தங்கம் விலை திடீரென குறையலாம். சுமார் 10-12% வரை குறையலாம் என்கிறார்கள். ஆனாலும், தங்கம் விலை ரூ.9300இல் 10% குறைந்தாலும் கூட அது ரூ.8200க்கு தான் வரும். அந்தளவுக்குக் குறைந்தால் நாம் தங்கத்தை விழுந்து அடித்துக் கொண்டு தாராளமாக வாங்கலாம். அதில் பிரச்சினையே இருக்காது.

சுக்கிரன் உக்கிரமா இருந்தால்

ஆனால், என்னைப் பொறுத்தவரை அதற்கு வாய்ப்பு குறைவு. அப்படி நடந்தாலுமே கூட தங்கம் விலை ரூ.8500க்கு மேல் தான் இருக்கும் என நினைக்கிறேன். அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தினால் மட்டுமே அது நடக்கும். ஆனால், அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்துவது போலத் தெரியவில்லை. உலகெங்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டே வருகிறது. இந்தச் சூழலில் ரூபாய் மதிப்பு சரிந்தாலும் நல்லதுதான். எனவே, தங்கத்தைப் பற்றி கவலையே பட வேண்டாம்.

சுக்கிரன் உக்கிரமா பார்த்து.. நமக்கு லக் அடித்து ரூ.8200க்கு போனால் தாராளமாக வாங்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. தங்கம் விலை இந்தளவுக்கு உயர்ந்துள்ளதால் தங்கம் விற்பனை சுமார் 30% வரை குறைந்துள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+