"மாதம் ரூ.50,000 சம்பாதித்தாலே வருமான வரி!" ஆனந்த் சீனிவாசன் புது கணக்கு! என்ன இப்படி சொல்லிட்டாரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது நாட்டில் இப்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக இருக்கிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் பலரும் வரிச் சுமையில் இருந்து தப்புகிறார்கள். இதற்கிடையே மாதம் ரூ.50,000 சம்பாதிப்போரும் கூட வரி செலுத்த வேண்டும் என்று பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியிருக்கிறார். அவர் ஏன் இப்படிச் சொன்னார்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் தான் அதிகம். அதிலும் ஐடி வளர்ச்சிக்குப் பிறகு பலரும் அதில் குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சியை அடைந்தனர். இதன் மூலம் மிகப் பெரிய ஒரு மிடில் கிளாஸ் சமூகம் உருவானது. மிடில் கிளாஸ் மக்களுக்கு எப்போதுமே வருமான வரி தான் பிரதானச் சிக்கலாக இருக்கும். தங்கள் வருவாயில் கணிசமான தொகையை அதற்கே செலுத்த வேண்டுமா என வேதனைப்படுவார்கள்.

Anand Srinivasan personal finance Income Tax

வருமான வரி

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் சமயத்தில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்பதே மக்களின் கேள்வியாக இருக்கும். இதனால் நாட்டின் ஒட்டுமொத்த மிடில் கிளாஸ் சமூகமும் பட்ஜெட்டையே எதிர்நோக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரி முறை

இது கடந்த 2019ம் ஆண்டு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கொரோனாவுக்குப் பின் 2023ம் ஆண்டு இது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்ட சூழலில், இப்போது இந்தாண்டு பட்ஜெட்டில் அது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வருமான வரி உச்ச வரம்பு நடப்பு நிதியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.. இது மிடில் கிளாஸ் மக்களுக்குக் கொண்டாட்டம் தான்.

இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் வருமான வரி தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது வருமான வரி உச்சவரம்பு 12 லட்சமாக இருப்பது அதிகம் எனச் சொல்லியிருக்கும் அவர், வருமான வரி உச்சவரம்பு ரூ.6 லட்சமாகக் குறைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "சிலர் நான் தான் வருமான வரி கட்டுகிறேனே.. பிறகு ஏன் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என கேட்கலாம்.. அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன். இந்தியாவில் எத்தனை சதவிகித பேர் வருமான வரி கட்டுகிறார்கள் தெரியுமா? இந்திய மக்கள் தொகையில் வெறும் 2% பேர் மட்டுமே ஜிஎஸ்டி கட்டுகிறார்கள். மீதமுள்ளவர்கள் ஜிஎஸ்டி மூலமாக மட்டுமே வரியைக் கட்டுகிறார்கள்.

ரூ.50,000

இந்தியாவில் ஒரு மீடியன் வருமானம், (அதாவது சராசரி வருமானம்) என்றால் ரூ.15,000 தான். பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்த்தால் வருமானம் ரூ.15000ஆக மட்டுமே இருக்கிறது. அதில் இருந்து 6 முதல் 6.5 மடங்கு அதிகம் சம்பாதிப்பவர்கள் தான் இப்போது வருமான வரி போடுகிறார்கள். என்னைக் கேட்டால் ரூ.50,0000 சம்பாதித்தாலே வரி விதிக்க வேண்டும். குறைந்தது ரூ.500ஆவது கட்ட வேண்டும். அரசுக்குக் காசு சும்மா வராது. வரி வசூலித்தால் தானே பணம் வரும்" என்றார்.

அதாவது இந்தியாவில் சரிசரி மாதச் சம்பளம் ரூ.15 ஆயிரமாக இருக்கிறது. எனவே, அதை விட 3 மடங்கு அதிகம் சம்பாதிப்போர்... அதாவது மாதம் ரூ.50000 சம்பாதிப்போர் குறைந்தபட்ச வருமான வரியையாவது கட்ட வேண்டும் என்பதே தனது கருத்து எனச் சொல்லி இடியை இறக்கியுள்ளார் ஆனந்த் சீனிவாசன். இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+