பிஸ்னஸ் vs முதலீடு.. இரண்டில் எதில் லாபம் சும்மா அள்ளும்? எது பாதுகாப்பானது? எளிய விளக்கம்
சென்னை: உங்கள் கைகளில் ஒரு ₹50,000 இருக்கு என வைத்துக் கொள்வோம்.. சிறுக சிறுக சேமித்துள்ளீர்கள் அல்லது போனஸாக வந்தது வைத்துக் கொள்வோம். இந்த ரூ.50,000ஐ வைத்து சொந்தமாக ஒரு கடையைத் தொடங்குவதா அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகளில் முதலீடு செய்து, அதை வளரவிடுவதா.. இரண்டில் எது பெஸ்ட் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது கையில் இருக்கும் ரூ.50,000 எப்படி முதலீடு செய்வது என்பது ஸ்திரத்தன்மை vs வளர்ச்சி, கட்டுப்பாடு vs சௌகரியம் ஆகியவற்றைப் பொறுத்தது. முதல் கேள்வி ஒரு கடையைத் தொடங்க ரூ.50,000 போதுமா? சொந்தக் கடை வைத்திருப்பது சக்திவாய்ந்தது என்றாலும் இது போதுமானதாக இருக்காது என்பதே வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

போதுமா?
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "கையில் ரூ.50 ஆயிரம் இருக்கிறது என்றால் நிதி சார்ந்த முதலீடுகளே சிறந்த இடம். பெரும்பாலான இடங்களில் சிறிய கடையைத் தொடங்கக் கூட இந்த தொகை போதுமானதாக இருக்காது. குறிப்பாக டெபாசிட், இன்வெண்டரி மற்றும் வொர்கிங் கேபிடல் எனப் பல செலவுகள் உள்ளன. மேலும், குறைந்த மூலதனத்துடன் பிஸ்னஸ் தொடங்கும்போது, அது ஆபத்தாகக் கூட முடியலாம்.
போதுமான பாதுகாப்பு இல்லாவிட்டால், சிறு இடையூறுகூட வணிகத்தை மொத்தமாகச் சீர்குலைக்கும். மறுபுறம் சரியான விஷயத்தில் முதலீடு செய்தால் அது நல்ல பலனைக் கொடுக்கும். இந்தியாவில் கடந்த காலத்தை எடுத்துப் பார்த்தால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் இன்டெக்ஸ் ஃபண்டுகள் ஆண்டுக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளன.
சிக்கல்கள்
கடை என்றதும் நிலையான வருமானம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், வருமானங்கள் அவ்வளவு கணிக்கக்கூடியவை அல்ல என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிறு பிஸ்னஸ்களில் எந்தளவுக்கு வருமானம் இருக்கும் என்பது தொடர்பாகப் புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை.. கடை எங்கு அமைகிறது.. தேவை, போட்டி எனப் பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். சிறு கடைகளை வெற்றிகரமாக நடத்தும்போது அவை நல்ல பணப்புழக்கத்தை உருவாக்க முடியும் என்றாலும், பல சிறு பிஸ்னஸ்கள் நஷ்டத்தையே எதிர்கொள்கின்றன. சில ஆண்டுகளிலேயே மூடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது..
மேலும், கடை என வரும்போது ஒரே பாட்டில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பரிவர்த்தனை, பராமரிப்புச் செலவுகள், சொத்து வரிகள் மற்றும் பழுதுபார்க்கும் செலவுகள் ஆகியவற்றை புறக்கணிக்கிறார்கள். இவை சேரும்போது, உண்மையான லாபம் மிகக் குறைவாக இருக்கும். ஒரு கடையை நடத்துவது என்பது ஷட்டர்களைத் திறப்பது, வாடகை வசூலிப்பது அல்லது பொருட்களை விற்பது என்பதையும் தாண்டிப் பல விஷயங்களைக் கொண்டது. கடைக்கு டெபாசிட், உட்புற அலங்காரம், உரிமங்கள், ஊழியர்களின் சம்பளம், வரிகள் இதர செலவுகள் என லிஸ்ட் போய் கொண்டே இருக்கும்.
இறங்கி வேலை செய்ய வேண்டும்
இது போன்ற செலவுகளைத் தாண்டி நீங்கள் உங்கள் கணிசமான நேரத்தை அதில் செலவிட வேண்டும். வெறுமன முதலீடுகளைப் போட்டுவிட்டு, ஆட்களை நியமித்தால் எல்லாம் தானாக நடக்காது. உங்களுக்கு அந்த தொழிலைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் இறங்கி வேலை செய்ய வேண்டும். அப்போது தான் நஷ்டத்தைத் தவிர்த்து லாபத்தை நோக்கிச் செல்ல முடியும். இப்படி கடையில் ஏகப்பட்ட பிரச்சனை இருந்தாலும் பெரும்பாலான மக்கள் கடைகளை ஆரம்பிக்கவே விரும்புவார்கள்.
ஏனென்றால் கடைகளை நம்மால் பார்க்க முடியும்.. இங்க நமது கடை இருக்கிறது என்ற ஒரு நிம்மதி கிடைக்கும். ஆனால், அதில் இருக்கும் ஆபத்துகளை உணர மாட்டார்கள். அதாவது உளவியல் ரீதியாகக் கடைகள் நமக்குப் பாதுகாப்பானதாகத் தோன்றலாம்.. ஆனால், கொஞ்சம் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் அதில் இருக்கும் ரிஸ்குகள் நமக்குப் புலப்படும்.
என்ன செய்ய வேண்டும்!
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ரூ.50,000 என்பது சிறிய தொகை. பெரும்பாலான மக்களுக்கு நிதி சொத்துகளில் முதலீடு செய்வதே சரியாக இருக்கும். டென்ஷன் இல்லை. நேரத்தைச் செலவழிக்கத் தேவையில்லை.. வெறுமன முதலீடு செய்துவிட்டு மறந்துவிடலாம்.. அதேநேரம் உங்களுக்குத் தொழில்முனைவோராக மாறுவதே ஆசை.. பணத்துடன் சேர்த்து டைம் போடவும் என்னால் முடியும் என்றால் பிஸ்னஸ் செய்வதே ஒரு ஆசை என இருப்போர் மட்டும் ₹50,000 வைத்து தொழில் தொடங்கலாம்!












Click it and Unblock the Notifications