3 நாளாக தொடர்ந்து அப்பர் சர்கியூட்டை தட்டும் பென்னி ஸ்டாக்.. பங்கின் விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க!
இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்து வருவது மட்டும் அல்லாமல், FII முதலீட்டாளர்கள் கைவிட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக கைகொடுத்த DII முதலீட்டாளர்களும் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இந்த நிலையில் சில பென்னி ஸ்டாக்ஸ் திடீரென உயர்ந்து வருகிறது.
வியாழக்கிழமை மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் எம்பவர் இந்தியா என்ற நிறுவனத்தின் பங்கு விலை 5 சதவீத அப்பர் சர்க்யூட்டைத் தொட்டு ரூ.1.81 ஆக உயர்ந்தது. இது தொடர்ச்சியாக நான்காவது வர்த்தக நாளாகும். கடந்த நான்கு வர்த்தக நாட்களில் மூன்று நாட்களில் அப்பர் சர்க்யூட்டை எட்டியுள்ளது இந்நிறுவன பங்கு.

பென்னி பங்குகள் (Penny Stocks) என்பது பங்குச்சந்தையில் மிகக் குறைந்த விலையில் வர்த்தகம் செய்யப்படும் சிறிய நிறுவனங்களின் பங்குகள் ஆகும். விலை குறைவாக இருக்கும் காரணத்தால் சிறிய அறிவிப்பு வந்தாலும் அப்பர் சர்கியூட் எட்டுவது இயல்பானது. இதை அடிப்படையாக வைத்து பல முதலீட்டாளர்கள் பெரும் பணத்தை பார்த்து வருகிறார்கள், ஆனால் இதில் ரிஸ்க் அதிகம்.
பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக ஏறுவதையோ அல்லது இறங்குவதையோ கட்டுப்படுத்த பங்குசந்தை அமைப்பு ஒவ்வொரு நிறுவனத்திற்கு தனிப்பட்ட எல்லைகளை நிர்ணயம் செய்யும். இதுதான் அப்பர் சர்க்யூட் (Upper Circuit) மற்றும் லோயர் சர்க்யூட் (Lower Circuit).
சரிவுக்கு மத்தியில் அப்பர் சர்கியூட்
இந்திய பங்குச் சந்தையின் பலவீனமான போக்குக்கு எதிர்கொண்டு இருப்பதற்கு மத்தியில் எம்பவர் இந்தியா பங்குகள் 3 நாட்களாக தொடர்ந்து அப்பர் சர்கியூட் எட்டியது மூலம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை 0.50 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்தன. நிஃப்டி ஸ்மால்கேப் 100 மற்றும் மிட்கேப் 100 குறியீடுகள் மந்தமான வர்த்தகத்தையே கடந்த சில நாட்களாக எதிர்கொண்டு வருகிறது.
NSE-யில் புதிய வர்த்தக வாய்ப்பு
எம்பவர் இந்தியா பங்குகளின் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் தேசிய பங்குச் சந்தையில் (NSE) வர்த்தகத்திற்கு அனுமதி கிடைத்ததாகும். முன்பு பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் (BSE) மட்டுமே பட்டியலிடப்பட்டிருந்தன. ஏப்ரல் 17, 2026 அன்று வெளியிடப்பட்ட NSE சுற்றறிக்கையின்படி, ஏப்ரல் 20, 2026 முதல் NSE-யில் "EMPOWER" என்ற சின்னத்தில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
பங்கு விலை செயல்திறன்
கடந்த ஒரு மாதத்தில் எம்பவர் இந்தியா பங்கு விலை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. மூன்று மாதங்களில் 27 சதவீதமும், ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆறு மாதங்களில் 17 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும், மூன்று ஆண்டுகளில் 450 சதவீதமும், ஐந்து ஆண்டுகளில் 1,107 சதவீதமும் அதிகரித்து மல்டிபேக்கர் வருமானத்தை அளித்து ஒரு பென்னி ஸ்டாக் ஆக உள்ளது.
பென்னி பங்குகளின் அபாயங்கள்
ரூ.100-க்கு குறைவான விலையில் கிடைக்கும் பென்னி ஸ்டாக்ஸ் பலருக்கும் "குறைந்த பணத்தில் பெரிய லாபம்" என்ற ஆசையை உருவாக்கும். ஆனால் உண்மையில், இது சந்தையில் மிகவும் ஆபத்தான முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் பலவீனமான அடிப்படை நிதி நிலை, குறைந்த வரலாறு அல்லது அதிக கடன் போன்ற பிரச்சனைகளைக் கொண்டிருக்கலாம்.
இந்த பங்குகளில் மிகப் பெரிய சிக்கலே அதன் பங்கு விலையில் ஏற்படும் அதிக மாற்றம் (volatility) தான். ஒரே நாளில் 20% அல்லது அதற்கும் மேல் விலை ஏறவும், இறங்கவும் வாய்ப்பு உள்ளது. இது நிறுவன வளர்ச்சியை விட, வதந்தி மற்றும் ஊகங்கள் காரணமாக அதிகமாக நடக்கும்.
மேலும், பென்னி ஸ்டாக்-ல் லிக்விடிட்டி பிரச்சனை முக்கியமானது. அதாவது சந்தையில் இந்த பங்குகளை வாங்குவது எளிதாக இருந்தாலும், விற்கும்போது வாங்குபவர்கள் இல்லாமல் சிக்கிக்கொள்ளலாம். குறிப்பாக சந்தை சரிவில், உங்கள் பணத்தை மீண்டும் பெற முடியாமல் போகும் அபாயம் உள்ளது.
பென்னி ஸ்டாக்ஸ் அதிகமாக 'pump and dump' மோசடிகளுக்கு இலக்காகின்றன. சிலர் தவறான தகவல்களை பரப்பி விலையை உயர்த்தி, பின்னர் தங்களின் பங்குகளை விற்றுவிடுவார்கள். இதனால் சாதாரண முதலீட்டாளர்கள் நஷ்டத்தில் சிக்குவார்கள்.
அதேபோல், இந்த நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளிப்படையாக கிடைக்காது. தகவல் தெளிவின்மை காரணமாக முதலீட்டு முடிவு எடுப்பது மிகவும் ரிஸ்கானது. மொத்தத்தில், பென்னி ஸ்டாக்ஸ் அதிக லாப வாய்ப்பை காட்டினாலும், அதே அளவில் முழு முதலீட்டையும் இழக்கும் அபாயமும் இதில் உள்ளது. எனவே, இதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் மிகுந்த கவனம் அவசியம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.oneindia.com அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications