TCS விவகாரம்: கர்ப்பமாக இருக்கும் நிதா கானுக்கு ஜாமீன் மறுப்பு.. மனுவை விசாரித்த நீதிபதி சொன்ன முக்கிய விஷயம்!

Subscribe to Oneindia Tamil

நாசிக் நீதிமன்றம் திங்கட்கிழமை, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நாசிக் பிபிஓ அலுவலகத்தில் நடைபெற்ற பாலியல் தொல்லை மற்றும் மதம் மாற்ற கட்டாயப்படுத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிதா கானுக்கு இடைக்கால கைது தடை வழங்க மறுத்துவிட்டது. மேலும், போலீசுக்கு ஏப்ரல் 27-ம் தேதி பதில் அளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நாசிக் காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), TCS நாசிக் அலுவலகத்தில் 9 பெண் ஊழியர்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் தொல்லை, மத மாற்ற முயற்சி, மத உணர்வுகளை புண்படுத்துதல், மன உளைச்சல் உள்ளிட்ட குற்றங்களை விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒரு பெண் ஆபரேஷன்ஸ் மேனேஜரும் அடங்குவார்.

TCS Nashik Harassment Case Nida Khan Anticipatory Bail Nashik Court Order TCS Sexual Coercion FIR SIT Probe TCS Nashik TCS TCS SIT TCS nida khan tcs nashik case nashik court denies interim protection nida khan tcs nashik sexual harassment case nida khan anticipatory bail rejected tcs nashik religious coercion allegations sit nashik police tcs probe nida khan two month pregnancy bail plea nashik court april 27 hearing tcs nashik molestation firs nida khan whatsapp group pressure tcs nashik female employees harassment raza rafiq memon shafi bikhan sheikh remand tcs nashik unit controversy nida khan search maharashtra tcs nashik case latest update TCS TCS TCS SIT TCS 27 TCS TCS TCS TCS

2 மாத கர்ப்பிணியாக உள்ள நிதா கான், தனக்கு ஜாமீன் மற்றும் இடைக்கால கைது தடை வழங்கக் கோரி சனிக்கிழமை நாசிக் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது வழக்கறிஞர் ராகுல் காஸ்லிவால், கர்ப்ப காலத்தை சுட்டிக்காட்டி உடனடி ஜாமீன் அளிக்க கோரினார்.

ஆனால் கூடுதல் அமர்வு நீதிபதி கே.ஜி. ஜோஷி இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. போலீஸ் தரப்பினரும், புகார்தாரரும் ஏப்ரல் 27-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதேபோல் நிதா கான் டிசிஎஸ் நிறுவனத்தில் என்ன பணியாற்றினார் என குழப்பம் இருந்தது. நிதா கான் ஒரு Process Associate ஆகப் பணியாற்றி வந்தார் என்றும், அவர் HR Manager அல்ல என்றும் TCS நிறுவனம் இதை தெளிவுபடுத்தியுள்ளது.

நிதா கானை கண்டுபிடிக்க நாசிக் போலீசார் மூன்று தனி அணிகளை அமைத்துள்ளனர். மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் நடைபெற்று அதன் பின்பு கைது செய்யப்பட்டார். இதுவரை 9 FIRகள் டிசிஎஸ் விவகாரம் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிதா கான் ஒரு வாட்ஸ்அப் குழுவில் ஊழியர்களை குறிவைத்து, பிரார்த்தனை செய்யவும், அசைவ உணவு சாப்பிடவும் கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெண் ஊழியர்களை இஸ்லாமிய முறைப்படி உடை அணியவும், நடந்து கொள்ளவும் அறிவுறுத்தியதாகவும் புகார்கள் உள்ளன. சில பெண்கள் மத நடைமுறைகளை கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், உணவுப் பழக்கத்தை ஏற்க வற்புறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

கடைசியாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரான ரஸா ரபிக் மேமன் (35) மற்றும் ஷபி பிகான் ஷேக் (36) ஆகியோரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற கைதிகள் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். SIT விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+