சட்டென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. சும்மாயில்ல 117டாலர்.. அமெரிக்க பொருளாதாரத்திற்கு ரெட் வார்னிங்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக "முழு நாகரிகமே இன்றிரவு அழியும்" என்று விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கார்க் தீவு என்பது ஈரானின் முக்கிய வருவாய் களஞ்சியமாகும், இங்கு தான் மொத்த எண்ணெய் சப்ளை தளம் உள்ளது.
இந்த ஒரு தாக்குதல் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆம் கார்க் தீவு மீது தாக்குதல் நடந்த அடுத்த சில நிமிடத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் போல் அதிகளவில தடுமாற்றம் காணாத அமெரிக்க கச்சா எண்ணெய் (WTI) விலை தற்போது 117 டாலரை கடந்துள்ளது. இது 2008 ஏப்ரலில் உலகளாவிய நிதி நெருக்கடிக்கு வித்திட்ட அமெரிக்க நிதி துறை திவாலாகி, ரெசிஷன் ஆன காலத்தில் எட்டிய பின்பு தற்போது WTI கச்சா எண்ணெய் 117 டாலரை கடந்துள்ளது.

எண்ணெய் விலை வரலாற்று உச்சம்
கார்க் தீவு தாக்குதலுக்குப் பிறகு, கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 117.32 டாலராக உயர்ந்துள்ளது. இது 2008 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு காணப்படும் மிக உயர்ந்த விலையாகும்.
அதேநேரத்தில், உலக அளவிலான பெஞ்ச்மார்க்கான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் 111.8 டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 110 டாலர் என்ற அளவீட்டை கடந்து கூடுதல் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கார்க் தீவு முக்கியதுவம்
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதம் கார்க் தீவு வழியாகவே நடைபெறுகிறது. இந்தத் தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மீதமுள்ள 10 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து மற்ற இடத்தில் இருந்து நடந்தாலும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அங்கும் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடு இருக்கும் வேளையில் ஈரானின் நிதி ஆதாரத்திற்கு மொத்தமாக வேட்டு வைத்துள்ளது இந்த தாக்குதல்.
விலை உயர்வுக்கு என்ன காரணம்?
தற்போதைய விலை உயர்வு, கச்சா எண்ணெய் உற்பத்தி குறவைதும், எண்ணெய் கப்பல் போக்குவரத்தில் உள்ள நெருக்கடி ஆகிய இரண்டையும் சேர்த்து இன்றைய பியூச்சர்ஸ் விலை உயர்வை பிரதிபலிக்கிறது.
2008ஆம் ஆண்டு உலக அளவில் எண்ணெய் விலை 115 டாலருக்கு மேல் சென்றபோது, உலகளாவிய தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தித் திறன் பற்றாக்குறை காரணமாக இருந்தது. ஆனால் தற்போது, கச்சா எண்ணெய் பெறுவதிலும் மற்றும் உள்கட்டமைப்பு மீதான ராணுவ தாக்குதல் அச்சுறுத்தலே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் - ரெட் வார்னிங்
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்குப் பிறகு, WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 117 அமெரிக்க டாலரை எட்டியுள்ளதால் அமெரிக்காவின் நுகர்வோர் விலைப் பணவீக்கம் (CPI) 3.7 சதவீதம் வரை உயரும் என்று பொருளாதார கணக்கீடு மாடல்கள் எச்சரிக்கின்றன. தற்போதைய விலை இன்னும் 7 வாரங்கள் தொடர்ந்தால், அமெரிக்கப் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதால், உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் தனது எச்சரிக்கையில் இன்றிரவை "உலக வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் நீரிணை பதற்றம் ஆகியவை இணைந்து, உலக எண்ணெய் சந்தையை நீண்டகாலத்துக்கு பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த நிலையில் ஈரான் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ள நிலையில் டிரம்ப் கொடுத்த இன்று இரவு 8 மணிக்கு என்ன முடிவு எடுப்பார் என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது. அமெரிக்க நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு என்றால், இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணி.
பியூச்சர்ஸ் கச்சா எண்ணெய் விலை
| பியூச்சர்ஸ் விலை | விலை | விலை உயர்வு |
| WTI கச்சா எண்ணெய் | 116.08 | 3.26% |
| Brent கச்சா எண்ணெய் | 110.5 | 0.67% |
| Murban கச்சா எண்ணெய் | 118.64 | -0.37% |
| இயற்கை எரிவாயு | 2.849 | 1.35% |
| பெட்ரோல் | 3.309 | 0.03% |
| எரிபொருள் எண்ணெய் | 4.395 | 1.55% |
| OPEC கூடை | 110.63 | 0.00% |
| DME ஓமன் | 120.81 | 2.16% |
| இந்தியக் கூடை | 130.93 | 8.35% |












Click it and Unblock the Notifications