விஜய் அமைச்சரவையில் அதிமுகவுக்கு 4 அமைச்சர் பதவியா? சி.வி.சண்முகத்தின் 'Rebel' சக்ஸஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்களுக்கு பதவி கிடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 2 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் நிலையில் அதிமுகவுக்கு 4 இடங்கள் கிடைக்க போவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பல்வேறு அதிரடி ட்விஸ்ட்களை கொடுத்து வருகிறது. இந்தத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக பெரும்பான்மை கிடைக்காமல் ஆட்சி அமைக்க முடியாமல் திணறியது.

AIADMK

இதையடுத்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றார். நேற்றைய தினம் 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றது முதல் தொடர்ந்து தேர்தல்களில் தோல்வி அடைந்து வருவது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால் 2026 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெறும் 46 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

இதனால் அவரை பதவி விலகுமாறு ஒரு தரப்பினர் கூறி வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் மூத்த தலைவர்களான சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, சி, விஜயபாஸ்கர் ஆகிய மூவர் தலைமையில் இந்த கலகம் பிறந்ததாக சொல்லப்படுகிறது.

அதாவது அதிமுகவினர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவிக்கு வந்துவிடுவார்கள். ஆனால் இந்த முறை அதிமுக வெல்லாததால் தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவியில் இல்லாத நிலை உள்ளது. தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் குதிரை பேரத்திற்கு அஞ்சி அதிமுக எம்எல்ஏக்கள் புதுவை ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

நிலை சீரானதும் அங்கிருந்து சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்ட நிலையில் 34 எம்எல்ஏக்கள் சிவி சண்முகம் தலைமையில் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஆதவ்வின் மாமியார் லீமா ரோஸும் இருக்கிறார்.

ஒரு கட்சியின் எம்எல்ஏக்களில் 3 இல் 2 பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறினால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் நடவடிக்கை பாயாது என்பதால் இவர்கள் பதவிக்காக தவெக பக்கம் போகலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் அதிமுகவின் 34 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு 4 அமைச்சர் பதவிகளை கொடுக்க தவெக முன்வந்ததாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+