Advertisement

ஆஸ்பத்திரியில் பெட் காலி இருக்கா.. ஆக்சிஜன் நிலவரம் எப்படி.. தெரிஞ்சிக்க ஜஸ்ட் ஒரு கிளிக் போதும்


சென்னை: கொரோனா 2வது அலை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களிலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. உயிர்காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் என்ற மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

பாதிப்பு மிக மோசமாகி விட்டால் பிளாஸ்மா சிகிச்சை செய்து நோயாளியை காப்பாற்ற வேண்டியிருக்கும். எனவே பிளாஸ்மா டோனர்களை, நோயாளிகளின் குடும்பத்தார் தேடி வருவதை சமூக வலைத்தளங்களில் பார்க்கமுடிகிறது.

Advertisement
Advertisement

தமிழகம், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உட்பட நாடு முழுக்கவும் ரெம்டெசிவிர் மருந்து, மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி, பிளாஸ்மா தானம் செய்வோர், ஆக்சிஜன் கிடைப்பது, உள்ளிட்டவற்றுக்கான தேடுதல் அதிகமாக இருக்கிறது.

சமூகவலைத்தளங்கள் முழுக்க இது தொடர்பான கேள்விகளும் தேடல்களும் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

எனவே, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதி, பிளாஸ்மா தானம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள ஒரு கூகுள் ஷீட் உருவாக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் கிளிக் செய்து பார்த்தால் அந்தந்த மாநிலத்தில் உள்ள நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை இந்த ஷீட் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது என்பதால் சமீபத்திய தகவல்கள் இதில் கிடைக்கும். நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் ஷேர் செய்து பயன் அடைந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்

Read more about: coronavirus oxygen india hospital

English Summary

Here is the google doc you can find information about hospital beds, remdesivir, oxygen, plasma and other details.
Read more...