சிதைந்த நிலையில் முகம்.. செயற்கை கால்! ஈரான் தலைவரின் நிலை இதுதான்.. நியூயார்க் டைம்ஸ் தகவல்
வாஷிங்டன்: ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனிக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் செயற்கை கால் உதவியுடன் உயிர் வாழ்ந்து வருவதாகவும் அமெரிக்க பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரியில் அவரது தந்தை அலி கமேனி அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், மொஜ்தபாவும் கடுமையாகக் காயமடைந்திருந்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மொஜ்தபா கமேனிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் செயற்கைக் கால் பொருத்தப்படுவதற்காகக் காத்திருக்கிறார். முகத்திலும் உதடுகளிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் பேசுவதில் சிரமம் உள்ளது என நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அவர் உடல்ரீதியாகப் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் மிகவும் கூர்மையாக இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் உளவுத்துறையால் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும் என்பதால், பெரிய தளபதிகள் கூட அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.
தான் குணமடையும் வரை, நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை புரட்சிகர காவல்படை (IRGC) தளபதிகளிடம் அவர் ஒப்படைத்துள்ளார். மொஜ்தபா தற்போது எந்தப் பொது நிகழ்விலும் பங்கேற்பதில்லை. அவரது உத்தரவுகள் அனைத்தும் ரகசியமாக கைகளால் எழுதப்பட்ட கடிதங்கள் மூலமாகவே மனிதச் சங்கிலி முறையில் பரிமாறப்படுகின்றன என சொல்லப்படுகிறது.
-
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications