இதுதான் விராட் கோலி.. 37 வயதிலும் ஆரஞ்ச் கேப் வென்ற கிங்.. சொந்த கையில் சூனியம் வைத்து கொண்ட குஜராத்
பெங்களூர்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 44 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 81 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த விராட் கோலி, ஆரஞ்ச் கேப்பையும் வென்று அசத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை விளாசியது. தொடக்க வீரர் சாய் சுதர்சன் 58 பந்துகளில் 5 சிக்ஸ், 11 பவுண்டரிகள் உட்பட 100 ரன்களை எடுத்தார்.

இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 81 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல் தேவ்தத் படிக்கல் 27 பந்துகளில் 6 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 55 ரன்களை குவித்தார். கடைசி நேரத்தில் வந்த க்ருணால் பாண்டியா 12 பந்துஇல் 23 ரன்களை எடுத்து வெற்றிபெற வைத்தார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய விராட் கோலி பவுண்டரியும், சிக்சருமாய் விளாசி தள்ளினார். இதன் காரணமாக ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த சீசனில் விராட் கோலி அடித்துள்ள 3வது அரைசதம் இதுவாகும். இதன் மூலமாக 7 இன்னிங்ஸில் ஆடி 328 ரன்களை எடுத்து ஆரஞ்ச் கேப் வென்று அசத்தி இருக்கிறார்.
அபிஷேக் சர்மா 323 ரன்களுடனும், கிளாசன் 320 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். இந்தப் போட்டியில் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி ஃபிளிக் ஷாட் அடிக்க முயன்று வாஷிங்டன் சுந்தரிடம் ஒரு அல்வா கேட்ச்சை கொடுத்தார். அதனை வாஷிங்டன் சுந்தர் கோட்டைவிட, அடைமழை வெளுத்து வாங்குவது போல் விராட் கோலி ரன் மழையை பொழிந்தார்.
அந்த கேட்ச்சை பிடித்திருந்தாலே, ஆர்சிபி அணியை எளிதாக கட்டுக்குள் வைத்திருந்திருக்க முடியும். இதனால் குஜராத் அணியின் ஃபீல்டிங் சொதப்பலை பயன்படுத்தி கொண்ட விராட் கோலி, அரைசதத்தை விளாசியதோடு மட்டுமல்லாமல், ஆரஞ்ச் கேப்பையும் கைப்பற்றி அசத்தி இருக்கிறார். இதனால் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications