விஜய் செலக்சன் எப்பவும் தப்பாகாது.. பார்த்து பார்த்து வாங்கிய 5050 கார்.. வாயடைத்து போகும் அளவுக்கு சிறப்பம்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும் வெற்றி பெற்று, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது தினசரி பயணங்களுக்கும் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஒரு சிறப்பு வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்.

மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு விஜய் தினமும் ஒரு என்ற வகையில் கவர்னர் மாளிகைக்கும், பனையூர் அலுவலகத்திற்கும், அவரது பெற்றோர் வீட்டுக்கும் செல்லும் போது பயன்படுத்தி வந்தாலும், முதல்வராக பதவியேற்ற பின்பு தொடர்ந்து ஓரே காரை தான் பயன்படுத்தி வருகிறார்.

Vijay TVK CM Vijay Car Toyota Land Cruiser LC300 Tamil Nadu CM Vijay Bulletproof SUV Vijay Convoy Vijay Toyota Land Cruiser CM Vijay car price Toyota LC300 ZX India bulletproof SUV India Vijay convoy vehicle Tamil Nadu CM luxury car Toyota Land Cruiser features Vijay security convoy LC300 ZX on road price Vijay new car 2026 Toyota SUV India Vijay official vehicle luxury SUV Tamil Nadu Toyota Land Cruiser mileage Vijay car collection LC300 ZX SUV 5050 SUV TN07DZ5050

தற்போது முதல்வர் விஜயின் முதன்மை வாகனமாக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் LC300 ZX தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் உலக அளவில் புகழ்பெற்ற பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் ஆடம்பர அம்சங்களுக்காக அறியப்படுகிறது. தற்போது முதலமைச்சர் விஜய் பயன்படுத்துவதால் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் LC300 ZX - செயல்திறன்

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் LC300 ZX என்பது உயர் தர லக்ஷரி டிரிம் கொண்ட முழு அளவிலான SUV கார் ஆகும். இந்த வாகனம் கடினமான சாலைகளிலும், சவாலான சூழல்களிலும் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டது. இதன் இன்ஜின் 3.3 லிட்டர் ட்வின்-டர்போ V6 டீசல் இன்ஜின் ஆகும். இது 304 பிஹெச்பி சக்தியையும், 700 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

10-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின் அதிகப்படியான செயல்திறனை வழங்குகிறது. 4WD அமைப்பு மற்றும் மல்டி-டெரெயின் செலக்ட் (ஆட்டோ, டர்ட், சாண்ட், மட், டீப் ஸ்னோ) அம்சங்கள் கொண்ட இந்த வாகனம், எந்த சாலை நிலையிலும் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டது.

பாதுகாப்பு அம்சங்கள்

முதலமைச்சர் விஜயின் பாதுகாப்புக்காக இந்த வாகனம் குண்டு துளைக்காத (bulletproof) மற்றும் குண்டு வெடிப்பைத் தாங்கும் (blast-resistant) அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிக உயர் பாதுகாப்பு தேவைப்படும் அரசியல் தலைவர்களுக்கு ஏற்ற வாகனமாகக் கருதப்படுகிறது.

மேலும், டோயோட்டா சேஃப்டி சென்ஸ் தொகுப்பில் டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிரேசிங் அசிஸ்ட் மற்றும் ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த வாகனம் ஜாமர் (jammer) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாதுகாப்பு கான்வாயின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.

கான்வாய் அமைப்பு

முதலமைச்சர் விஜயின் பயணங்களுக்கு 12 முதல் 16 வாகனங்கள் வரை கொண்ட பாதுகாப்பு கான்வாய் பயன்படுத்தப்படுகிறது. இந்த கான்வாயில் கமாண்டோக்கள், ஜாமர் வாகனங்கள், ஆம்புலன்ஸ் (அவசர மருத்துவ வசதி) உள்ளிட்டவை அடங்கும். மேலும் இந்த கான்வாய் வாகனத்தில் அதிநவீன கம்யூனிகேஷன் சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த கான்வாய், முதலமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

தற்போது விஜய் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து தினமும் 18 கிலோமீட்டர் பயணத்தில் கோட்டைக்கு வருகிறார். இந்த நீண்ட தூர பயணத்திற்கு தேவையான தேவையான உயர் பாதுகாப்பை இந்த கான்வாய் வழங்குகிறது.

காரின் விலை விவரம்

தமிழ்நாட்டில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் LC300 ZX-ன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.2.18 கோடியாக உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களில் ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் இன்சூரன்ஸ் செலவுகளுடன் சேர்த்து ஆன்-ரோடு விலை சுமார் ரூ.2.70 கோடி முதல் ரூ.2.85 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற வாகனங்கள்

முதலமைச்சர் விஜய்யிடம் BMW i7 லக்ஷரி எலக்ட்ரிக் செடான், Innova, Lexus LM 350h, Black Defender மற்றும் Toyota Vellfire உள்ளிட்ட பல வாகனங்கள் உள்ளது. மேலும் இந்த Toyota Land Cruiser LC300 ZX கார் விஜயின் பெயரில் TN07DZ5050 எண்ணில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+