இலவச பஸ் திட்டத்தை விடாதீங்க! விஜய்க்கு "செக்"! உதயநிதிக்கு "வாழ்த்து".. ஜவாஹிருல்லாவின் அதிரடி மூவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, மக்கள் அளித்துள்ள இந்த மாபெரும் பொறுப்பு அவர்களின் அபரிமிதமான நம்பிக்கையைச் சுமந்து நிற்பதைச் சுட்டிக்காட்டி இருந்தார்.

Free bus service scheme

கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு எனத் தொடரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும், சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவம் போன்ற அடிப்படை மதிப்புகளையும் புதிய அரசு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து முன்னெடுத்துச் சென்று, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்று பேராசிரியர் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்றைய தினம் வாழ்த்து கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளையும், தமிழ்நாட்டின் ஜனநாயக மற்றும் சமூகநீதி அரசியலின் மரபையும் பிரதிபலிக்கும் வகையில் அவர் இந்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. மிக முக்கியமானதொரு காலத்தில் அவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

சட்டப்பேரவையில் மக்களின் குரலாக செயல்பட்டு, ஆளும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு வலுவான குரல் கொடுப்பார் என்பது உறுதி. திராவிட இயக்கத்தின் கொள்கைகள், சமூகநீதி, மாநில உரிமைகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகப் பண்புகளை உறுதியாக முன்னெடுத்து செல்லும் எதிர்க்கட்சித் தலைமையை அவர் வழங்குவார் எனவும் நம்புகிறேன். அவரது புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன் என்று மனதார கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+